Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

வயதான பெண்களை அம்மாக்கள் போலவும், இளம் பெண்களை தங்கைகள் போலவும் நடத்துங்கள்

வயதான பெண்களை அம்மாக்கள் போலவும், இளம் பெண்களை தங்கைகள் போலவும் நடத்துங்கள்

வயதில் மூத்த சகோதர சகோதரிகளை அப்பா அம்மா போலவும் வயதில் சின்ன சகோதர சகோதரிகளைக் கூடப்பிறந்தவர்கள் போலவும் பார்க்கும்படி பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:1, 2-ஐ வாசியுங்கள்.) குறிப்பாக சகோதரர்கள், சகோதரிகளை மதிப்பு மரியாதையோடு நடத்துவது முக்கியம்.

ஒரு சகோதரர், ஒரு சகோதரியைப் பார்த்து வழியவோ தர்மசங்கடப்படுகிற மாதிரி அவரிடம் நடந்துகொள்ளவோ கூடாது. (யோபு 31:1) கல்யாணம் ஆகாத ஒரு சகோதரர், கல்யாணம் ஆகாத ஒரு சகோதரியுடைய உணர்ச்சிகளோடு விளையாடக் கூடாது. அவரைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் ‘இவர் என்னை காதலிக்கிறாரோ?’ என்று அந்தச் சகோதரி நினைக்கிற மாதிரி நடந்துகொள்ளக் கூடாது.

மூப்பர்களிடம் சகோதரிகள் பவ்வியமாக ஒரு கேள்வி கேட்கும்போதோ ஒரு விஷயத்தை இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லும்போதோ அவர்கள் அதைக் கேட்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, கணவருடைய ஆதரவு இல்லாத சகோதரிகளை மூப்பர்கள் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.—ரூ 2:8, 9.

ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்—விதவைகளிடமும் அப்பா இல்லாத பிள்ளைகளிடமும் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சகோதரி மயன்ட்டிடம் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் எந்தளவுக்கு அன்பு காட்டினார்கள்?

  • சபையில் இருப்பவர்கள் காட்டிய அன்பு, அந்தக் கிராமத்தில் இருந்தவர்களுக்கு எப்படி ஒரு நல்ல சாட்சியாக அமைந்தது?

  • சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் காட்டிய அன்பு சகோதரி மயன்டின் பிள்ளைகளை என்ன செய்யத் தூண்டியது?

உங்கள் சபையில் இருக்கிற சகோதரிகளிடம் நீங்கள் எப்படியெல்லாம் அன்பையும் அக்கறையையும் காட்டலாம்?