பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஏழைகள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது?
ஏழைகளுக்கும் சொத்துசுகம் இல்லாதவர்களுக்கும் இஸ்ரவேல் மக்களிடமிருந்து உதவி கிடைத்தது (உபா 14:28, 29; it-2-E பக். 1110 பாரா 3)
கடன் வாங்கிய இஸ்ரவேலர்களின் கடன் ஏழாம் வருஷத்தின் முடிவில் “ரத்து” செய்யப்பட்டது (உபா 15:1-3; it-2-E பக். 833)
இஸ்ரவேலர் ஒருவர் தன்னையே அடிமையாக விற்றிருந்தால், ஏழாம் வருஷத்தில் அவருடைய எஜமான் அவரை விடுதலை செய்ய வேண்டும். அதோடு, பரிசுகளையும் கொடுத்தனுப்ப வேண்டும் (உபா 15:12-14; it-2-E பக். 978 பாரா 6)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கஷ்டத்துல இருக்கிற சகோதர சகோதரிகள்மேல எனக்கு அக்கறை இருக்குங்கிறத நான் எப்படியெல்லாம் காட்டலாம்?’