Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”

“ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”

பூர்வ கால இஸ்ரவேலில் இருந்த ஏழைகளுக்கு யெகோவா உதவி செய்தார். இன்று, பணக் கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் எப்படியெல்லாம் உதவுகிறார்?

  • பணத்தைப் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள அவர் கற்றுக்கொடுக்கிறார்.—லூ 12:15; 1தீ 6:6-8

  • சுயமரியாதையைக் காத்துக்கொள்ள உதவுகிறார்.—யோபு 34:19

  • கடினமாக உழைக்கவும் கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும் கற்றுத்தருகிறார்.—நீதி 14:23; 20:1; 2கொ 7:1

  • அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடைய குடும்பத்தின் பாகமாக ஆவதற்கு வாய்ப்பைத் தருகிறார்.—யோவா 13:35; 1யோ 3:17, 18

  • எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கிறார்.—சங் 9:18; ஏசா 65:21-23

எந்தளவுக்குப் பணக் கஷ்டத்தில் தவித்தாலும் சரி, நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. (ஏசா 30:15) யெகோவாவுடைய அரசாங்கத்துக்கு நாம் எப்போதும் முதலிடம் கொடுத்தால், நம்முடைய அன்றாடத் தேவைகளை அவர் கவனித்துக்கொள்வார்.—மத் 6:31-33.

அன்பு ஒருபோதும் ஒழியாது . . . வறுமையில் வாடினாலும்—காங்கோ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • மண்டல மாநாடு நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருந்த சகோதரர்கள், தூரமான இடங்களிலிருந்து வந்த சகோதரர்களை எப்படி அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள்?

  • வசதிவாய்ப்பு இல்லாதவர்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அன்பைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

  • நம்மிடம் பொருள்வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்?