Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆலயத்தின் கட்டுமான வேலை எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை சாலொமோன் ராஜா பார்க்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்

அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்

ரொம்பவே தரமான பொருள்களை வைத்து சாலொமோன் ஆலயத்தைக் கட்டினார் (1ரா 5:6, 17; w11-E 2/1 பக். 15)

அந்த வேலையைச் செய்ய நிறைய பேர் உதவி செய்தார்கள் (1ரா 5:13-16; it-1-E பக். 424; it-2-E பக். 1077 பாரா 1)

அந்த வேலையைச் செய்து முடிக்க சாலொமோனும் மக்களும் ஏழு வருஷங்கள் கடினமாக உழைத்தார்கள் (1ரா 6:38; அட்டைப் படத்தைப் பாருங்கள்)

யெகோவாமேல் அன்பு இருந்ததால்தான் அவரைப் புகழ்வதற்காக சாலொமோனும் அவருடைய மக்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு அழகான ஆலயத்தைக் கட்டினார்கள். வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சந்ததியில் வந்த பிள்ளைகள் யெகோவாவை வணங்குவதில் அந்தளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. ஆலயத்தை அவர்கள் நல்ல விதத்தில் பார்த்துக்கொள்ளவும் இல்லை. கடைசியில், ஆலயம் முழுமையாக அழிந்துபோனது.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவ வணங்குற விஷயத்தில என்னோட ஆர்வம் குறைஞ்சிடாம இருக்க நான் என்னெல்லாம் செய்றேன்?’