கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உங்களுடைய ஜெபத்துக்கு எப்படி பதில் கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறீர்களா?
நிறைய பேருடைய ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்ததைப் பற்றி நாம் பைபிளில் பார்க்கிறோம். பிரச்சினையைச் சமாளிப்பதற்காக அவர்கள் உதவி கேட்டபோது, யெகோவா கொடுத்த பதிலைப் பார்த்து அவர்களுடைய விசுவாசம் நிச்சயம் பலப்பட்டிருக்கும். அதனால் நாமும் யெகோவாவிடம் குறிப்பாக ஜெபம் செய்யலாம். நம்முடைய ஜெபங்களுக்கு அவர் எப்படிப் பதில் கொடுக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கலாம். எதிர்பார்க்காத விதத்தில் அவர் நமக்குப் பதில் கொடுக்கலாம். சில சமயங்களில் நாம் கேட்டதைவிட அதிகமாகவே கொடுக்கலாம். (2கொ 12:7-9; எபே 3:20) யெகோவா நம்முடைய ஜெபங்களுக்கு எப்படியெல்லாம் பதில் கொடுக்கலாம்?
-
பிரச்சினையைச் சமாளிக்க நமக்குப் பலத்தைக் கொடுக்கலாம், மன அமைதியைக் கொடுக்கலாம், அல்லது நமக்கு நிறைய விசுவாசத்தைக் கொடுக்கலாம்.—பிலி 4:13
-
நல்ல தீர்மானத்தை எடுக்க ஞானத்தைக் கொடுக்கலாம்.—யாக் 1:5
-
ஒரு விஷயத்தைச் செய்வதற்கான ஆசையையும் அதைச் செய்து முடிப்பதற்குத் தேவையான சக்தியையும் நமக்குக் கொடுக்கலாம்.—பிலி 2:13
-
நாம் கவலையாக இருக்கும்போது நமக்கு மனசமாதானத்தைக் கொடுக்கலாம்.—பிலி 4:6, 7
-
மற்றவர்கள் மூலமாக நமக்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் கொடுக்கலாம். அவர்கள் மூலமாக நம்முடைய தேவைகளையும் கவனித்துக்கொள்ளலாம்.—1யோ 3:17, 18
-
வேறொருவருக்காக நாம் ஜெபம் செய்யும்போது அந்த நபருக்கு அவர் உதவி செய்யலாம்.—அப் 12:5, 11
யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
உடம்பு சரியில்லாததால் நம்மால் நிறைய செய்ய முடியவில்லை என்றால், சகோதரர் ஷெமேசூவின் அனுபவம் நம்மை எப்படிப் பலப்படுத்தும்?
-
நாம் எப்படிச் சகோதரர் ஷெமேசூ மாதிரி நடந்துகொள்ளலாம்?