பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஞானம்—ரொம்பவே விலைமதிப்புள்ளது
சாலொமோன் யெகோவாவிடம் ஞானத்தைக் கேட்டார் (1ரா 3:7-9; w11 12/15 பக். 8-9 பாரா. 4-6)
சாலொமோன் ஞானத்தைக் கேட்டதை நினைத்து யெகோவா ரொம்ப சந்தோஷப்பட்டார் (1ரா 3:10-13)
கடவுளிடமிருந்து கிடைக்கிற ஞானத்தை சாலொமோன் ரொம்ப உயர்வாக மதித்ததால் அவருடைய ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக இருந்தது (1ரா 4:25)
ஞானமாக நடக்கிற ஒருவர், ஒரு விஷயத்தைப் பற்றிய எல்லா தகவல்களையும் தெரிந்துவைத்திருப்பார். அதை நன்றாகப் புரிந்துவைத்திருப்பார். அதை வைத்து நல்ல தீர்மானத்தை எடுப்பார். தங்கத்தைவிட ஞானம் ரொம்ப மதிப்புள்ளது. (நீதி 16:16) நாம் யெகோவாவிடம் ஞானத்தைக் கேட்டால்... அவருக்குப் பயந்து நடந்தால்... அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் இருந்தால்... பைபிளை ஆழமாகப் படித்தால்... அவர் நமக்கு நிச்சயம் ஞானத்தைத் தருவார்.