Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள் | புதிய ஊழிய ஆண்டுக்காக குறிக்கோள்களை வையுங்கள்

பயனியர் ஊழியம் செய்யுங்கள்

பயனியர் ஊழியம் செய்யுங்கள்

யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காகக் குறிக்கோள்கள் வைக்கும்போது நம்முடைய சக்தியை நம்மால் நன்றாகப் பயன்படுத்த முடியும். (1கொ 9:26) சீக்கிரத்தில் இந்த உலகத்துக்கு முடிவு வரப்போகிறது. அதனால், குறிக்கோள்கள் வைத்தால்தான் நம்முடைய நேரத்தை நம்மால் நன்றாகப் பயன்படுத்த முடியும். (எபே 5:15, 16) வரப்போகிற ஊழிய ஆண்டில் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம் என்று உங்களுடைய குடும்ப வழிபாட்டில் கலந்துபேசுங்கள். என்னென்ன குறிக்கோள்களை நீங்கள் வைக்கலாம் என்று தெரிந்துகொள்ள, இந்தப் பயிற்சிப் புத்தகத்தில் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன. நன்றாக ஜெபம் செய்துவிட்டு அதைப் பற்றி யோசித்துப்பாருங்கள்.—யாக் 1:5.

உதாரணத்துக்கு, குடும்பத்தில் இருக்கும் ஒருவராவது ஒழுங்கான பயனியராக ஆவதற்கு, குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களால் உதவ முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். மணிநேரங்களை எடுக்க முடியுமா என்று உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால், உங்களைப் போன்ற சூழ்நிலையில் இருக்கிற மற்ற பயனியர்களிடம் பேசுங்கள். (நீதி 15:22) ஒருவேளை, அவர்களில் யாரையாவது உங்களுடைய குடும்ப வழிபாட்டுக்குக் கூப்பிட்டு, அதைப் பற்றி அவர்களிடம் பேசலாம். அவர்கள் சொல்வதை வைத்து உங்களுக்கென்று ஒரு அட்டவணை போடுங்கள். முன்பு ஒரு பயனியராக நீங்கள் சேவை செய்திருந்தால், திரும்பவும் உங்களால் அந்தச் சேவையை ஆரம்பிக்க முடியுமா என்று யோசித்துப்பாருங்கள்.

உங்கள் குடும்பத்தில் இருக்கும் சிலரால் ஒரு மாதமோ அல்லது சில மாதங்களோ துணைப் பயனியராகச் சேவை செய்ய முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் உங்களால் நிறைய நேரம் ஊழியம் செய்ய முடியவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரம் மட்டும் ஊழியம் செய்ய முயற்சி செய்யுங்கள். அப்போது உங்களால் துணைப் பயனியர் செய்ய முடியும். நீங்கள் வேலைக்கு அல்லது ஸ்கூலுக்குப் போகிறவர்களாக இருந்தால், நிறைய விடுமுறை இருக்கிற மாதத்தில் அல்லது ஐந்து சனி-ஞாயிறு வருகிற மாதத்தில் துணைப் பயனியர் செய்ய திட்டமிடலாம். எப்போது துணைப் பயனியர் செய்யலாம் என்பதைக் காலண்டரில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எப்படிச் செய்யலாம் என்பதற்கும் ஒரு அட்டவணை போடுங்கள்.—நீதி 21:5.

தைரியமுள்ள . . . பயனியராக இருங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் செல்லுங்கள்:

  • சகோதரி ஆமண்டின் தேவைகளை யெகோவா எப்படிக் கவனித்துக்கொண்டார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?