Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க உங்களால் உதவ முடியும்

உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க உங்களால் உதவ முடியும்

குடும்பங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். (சங் 127:3-5; பிர 9:9; 11:9) ஆனால், கஷ்டங்களாலும் குடும்பத்தில் இருக்கிறவர்கள் செய்கிற சில தவறுகளாலும் அந்த சந்தோஷம் காணாமல் போய்விடலாம். அப்படியென்றால், குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

ஒரு கணவர் தன்னுடைய மனைவிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். (1பே 3:7) மனைவியோடு நேரம் செலவு செய்வது முக்கியம். அவரிடம் இருந்து எதிர்பார்க்கிற விஷயத்தில் எதார்த்தமாக இருக்க வேண்டும். தனக்காகவும் குடும்பத்துக்காக அவர் செய்கிற விஷயங்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும். (கொலோ 3:15) மனைவிமேல் இருக்கிற அன்பை வெளிப்படையாக காட்ட வேண்டும்; பாராட்ட வேண்டும்.—நீதி 31:28, 31.

ஒரு மனைவி தன்னுடைய கணவருக்கு எல்லா சமயத்திலும் ஆதரவு கொடுக்க வேண்டும். (நீதி 31:12) எல்லா விஷயத்திலும் ஒத்துழைத்து, அவருக்கு கட்டுப்பட்டு நடப்பது முக்கியம். (கொலோ 3:18) அவரிடம் அன்பாக பேச வேண்டும். மற்றவர்களிடம் அவரை பற்றி பேசும்போது நல்லபடியாக பேச வேண்டும்.—நீதி 31:26.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து நேரம் செலவு செய்ய வேண்டும். (உபா 6:6, 7) பிள்ளைகளை நேசிப்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். (மத் 3:17) அவர்களைக் கண்டித்து திருத்தும்போது அன்பையும் பகுத்தறிவையும் காட்ட வேண்டும்.—எபே 6:4.

பிள்ளைகள் பெற்றோருக்கு மதிப்பு கொடுத்து, அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். (நீதி 23:22) தங்களுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது... தங்களுடைய உணர்வுகள்... என எல்லாவற்றையும் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பெற்றோர் கண்டித்து திருத்தும்போது அதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.—நீதி 19:20.

குடும்பத்தில் சந்தோஷத்தை வளர்க்க... என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:

குடும்பத்தில் சந்தோஷம் இருப்பதற்கு ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள்?