Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்க செப்டம்பரில் விசேஷ ஊழியம்!

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்க செப்டம்பரில் விசேஷ ஊழியம்!

மனிதர்களுடைய எல்லா பிரச்சினைக்கும் கடவுளுடைய அரசாங்கம்தான் ஒரே தீர்வு என்பதைப் பற்றி மக்களுக்கு சொல்ல, செப்டம்பர் மாதத்தில் விசேஷ முயற்சிகளை எடுக்கப் போகிறோம். (மத் 24:14) நீங்கள் என்ன செய்யலாம்? எவ்வளவு பேரிடம் முடியுமோ அவ்வளவு பேரிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சொல்கிற ஒரு வசனத்தைக் காட்டுங்கள். யாராவது ஆர்வம் காட்டினால், அவருக்கு காவற்கோபுரம் எண் 2, 2020 பொது இதழைக் கொடுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அவரை மறுபடியும் சந்தித்து, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டில் இருந்து பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். செப்டம்பர் மாதத்தில் துணைப் பயனியராக சேவை செய்கிறவர்கள் 15 அல்லது 30 மணிநேரம் ஊழியம் செய்யலாம்.

கடவுளுடைய அரசாங்கத்தை எதிர்க்கிற எல்லா அதிகாரங்களையும் அது நொறுக்கப்போகும் காலம் ரொம்பப் பக்கத்தில் வந்துவிட்டது. (தானி 2:44; 1கொ 15:24, 25) அதனால், யெகோவாவையும் அவருடைய அரசாங்கத்தையும் ஆதரிக்க நமக்குக் கிடைத்திருக்கிற இந்த விசேஷ வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்!