Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

புதிய ஊழிய ஆண்டில் நீங்கள் என்ன குறிக்கோளை வைத்திருக்கிறீர்கள்?

புதிய ஊழிய ஆண்டில் நீங்கள் என்ன குறிக்கோளை வைத்திருக்கிறீர்கள்?

ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைவதற்கு கடினமாக முயற்சி செய்யும்போது நம்மால் யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய முடியும், அவரை சந்தோஷப்படுத்தவும் முடியும். நாம் இன்னும் நன்றாக முன்னேறுவதற்கும் அது உதவும். (1தீ 4:15) அதற்காக நாம் தியாகம் செய்கிற நேரமோ சக்தியோ வீண் போகாது. நாம் வைத்திருக்கிற குறிக்கோள்களைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய சூழ்நிலைகள் மாறலாம். நாம் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு குறிக்கோள், இப்போது அடைய முடியாத ஒன்றாக மாறியிருக்கலாம். அல்லது, அதை ஏற்கெனவே அடைந்திருக்கலாம். அதனால், இப்போது வேறொரு குறிக்கோளை வைக்க வேண்டியிருக்கலாம்.

நம்முடைய குறிக்கோளைப் பற்றி யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு நல்ல சமயம், புதிய ஊழிய ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்புதான். இதைப் பற்றி குடும்ப வழிபாட்டில் கலந்துபேசி, தனிப்பட்ட விதமாகவோ குடும்பமாகவோ நீங்கள் சில குறிக்கோள்களை வையுங்கள்.

இங்கே சொல்லியிருக்கிற விஷயங்களை இன்னும் நன்றாக செய்வதற்கு நீங்கள் என்ன குறிக்கோள்களை வைக்கலாம்? அதை அடைவதற்கு நீங்கள் என்ன படிகளை எடுக்கலாம்?

பைபிளை வாசிக்க, தனிப்பட்ட படிப்பு படிக்க, கூட்டங்களில் கலந்துகொள்ள, பதில் சொல்ல.—w02 6/15 பக். 14-15 பாரா. 14-15

ஊழியம் செய்ய.—w23.05 பக். 27 பாரா. 4-5

கிறிஸ்தவ குணங்களை வளர்க்க.—w22.04 பக். 23 பாரா. 5-6

மற்ற குறிக்கோள்கள்: