கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவைப் போலவே மாறாத அன்பைக் காட்டுங்கள்
மாறாத அன்பைக் காட்டும் விஷயத்தில் யெகோவா நம் எல்லாருக்குமே மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார். (சங் 103:11) இந்த அன்பு ஏதோ ஒரு நேரத்தில் வந்துட்டு போகிற ஒரு உணர்ச்சியோ அல்லது ஈர்ப்போ கிடையாது. இது ரொம்ப ஆழமான, என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற ஒரு பந்தம். இப்படிப்பட்ட ஒரு அன்பைத்தான் யெகோவா தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களிடம் காட்டினார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை விடுதலை செய்து, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து குடிவைத்தார். (சங் 105:42-44) அவர்களுக்காகப் போர் செய்தார். அவர்கள் மறுபடியும் மறுபடியும் தவறு செய்தபோதும் மன்னித்தார். (சங் 107:19, 20) “மாறாத அன்பை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார் என்று நன்றாக யோசித்து” பார்க்கும்போது அவரைப் போலவே அன்பு காட்ட வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும்.—சங் 107:43.
“மாறாத அன்பை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
மாறாத அன்பை நாம் எப்படியெல்லாம் காட்டலாம்?
-
மாறாத அன்பை காட்டுவதற்கு நாம் ஏன் தியாகங்கள் செய்ய வேண்டும்?