Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நமக்குச் சேவை செய்ய அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்

நமக்குச் சேவை செய்ய அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்

வட்டார கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் நம்மீது அதிக அன்பு இருப்பதால் நிறைய தியாகங்களைச் செய்கிறார்கள். நம்மைப் போலவே இவர்களுக்கும் நிறைய தேவைகள் இருக்கலாம். சிலசமயம், உடலளவிலோ மனதளவிலோ அவர்கள் சோர்ந்துபோகலாம். அல்லது, எதையாவது நினைத்து கவலைப்படலாம். (யாக் 5:17) இருந்தாலும், ஒவ்வொரு வாரமும் அவர்கள் சந்திக்கப்போகும் சகோதர சகோதரிகளை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்று யோசிக்கிறார்கள். உண்மையிலேயே, வட்டார கண்காணிகள் “இரட்டிப்பான மதிப்பைப் பெறத் தகுதியுள்ளவர்.”—1தீ 5:17.

ரோம சபையில் இருந்தவர்களுக்கு “ஆன்மீக அன்பளிப்பை” கொடுக்க அப்போஸ்தலன் பவுல் போனார். அப்போது, ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும்,’ உற்சாகம் பெறவும் ஏங்குவதாக சொன்னார். (ரோ 1:11, 12) வட்டார கண்காணியையும், அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால், அவருடைய மனைவியையும் எப்படி உற்சாகப்படுத்தலாம் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

வட்டாரக் கண்காணியின் பயணம்—தொலைதூர இடங்களுக்கு என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • வட்டார கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் சபையில் இருப்பவர்கள்மேல் எப்படியெல்லாம் அன்பு காட்டுகிறார்கள்? அதற்காக அவர்கள் என்னென்ன தியாகங்களை செய்கிறார்கள்?

  • அவர்கள் எடுக்கிற முயற்சிகளால் நீங்கள் எப்படி நன்மையடைந்திருக்கிறீர்கள்?

  • நாம் எப்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம்?