Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

எஸ்றா நடந்துகொண்ட விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது

எஸ்றா நடந்துகொண்ட விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது

கடவுளுடைய வார்த்தைத் தன் இதயத்தைத் தூண்டுவதற்கு எஸ்றா இடம்கொடுத்தார்; அதன்படி நடப்பதற்குத் தீர்மானமாக இருந்தார் (எஸ்றா 7:10; w00 10/1 பக். 14 பாரா 8)

கடவுளுடைய ஞானத்தைப் புரிந்துகொள்ள எஸ்றா மற்றவர்களுக்கு உதவினார் (எஸ்றா 7:25; si பக். 75 பாரா 5)

எஸ்றா மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். அதனால், கடவுள் தன்னைக் கண்டிப்பாக வழிநடத்துவார், பாதுகாப்பார் என்று நம்பினார் (எஸ்றா 8:21-23; it-1-E பக். 1158 பாரா 4)

எஸ்றா நடந்துகொண்ட விதத்தில், கடவுள் கொடுத்த ஞானம் தெரிந்தது; அதனால், ராஜா அவருக்குப் பெரிய பெரிய பொறுப்புகளைக் கொடுத்தார். எஸ்றாவைப் போலவே நாமும் நம் நடத்தையின் மூலம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கலாம்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் கடவுளுக்குப் பிடித்தமாதிரி நடக்கிறேனா? யெகோவாவை வணங்காதவர்களின் மதிப்பைப் பெறும் அளவுக்கு என்னுடைய நடத்தை இருக்கிறதா?’