கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“நல்ல செய்திக்காக ‘வழக்காடி, சட்டப்பூர்வ உரிமையை’ பெறுவது”
ஆலயத்தைத் திரும்பவும் கட்டும் வேலையை இஸ்ரவேலர்கள் செய்தபோது எதிரிகள் அதைத் தடுக்கப் பார்த்தார்கள். அப்போது தங்களுக்கு இருந்த சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டுவதற்கு இஸ்ரவேலர்கள் முயற்சி செய்தார்கள். (எஸ்றா 5:11-16) இவர்களைப் போலவே கிறிஸ்தவர்களும் நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவதற்குக் கடினமாக முயற்சி செய்திருக்கிறார்கள். (பிலி 1:7) அதற்காக, 1936-ல் உலக தலைமை அலுவலகத்தில் சட்ட இலாகா ஏற்படுத்தப்பட்டது. இன்றும், பிரசங்க வேலையை செய்ய நமக்கு இருக்கிற சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட, உலக தலைமை அலுவலக சட்ட இலாகா உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்களுக்கு உதவுகிறது.
உலகத் தலைமை அலுவலகச் சட்ட இலாகாவை சுற்றிப்பார்க்கலாம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன சட்ட ரீதியான சிக்கல்கள் வந்திருக்கின்றன?
-
என்னென்ன வழக்குகளில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது? உதாரணம் சொல்லுங்கள்
-
நல்ல செய்திக்காக ‘வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவதற்கு’ நாம் ஒவ்வொருவருமே எப்படி உதவலாம்?
-
யெகோவாவின் சாட்சிகள்மேல் போடப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்களையும் விசுவாசத்துக்காக சிறையில் இருப்பவர்களின் பட்டியலையும் நம்முடைய வெப்சைட்டில் எங்கே பார்க்கலாம்?