பைபிளில் இருக்கும் புதையல்கள்
சில வேலைகளை நீங்கள் தாழ்வாக பார்க்கிறீர்களா?
தலைமை குருவும் அவருடைய சகோதரர்களும் தங்களையே பெரிய ஆட்களாக நினைக்கவில்லை. மதிலை கட்டும் வேலையை இறங்கி செய்தார்கள் (நெ 3:1)
சில முக்கியப் பிரமுகர்கள், மேற்பார்வை செய்கிறவர்களின் “கீழ் வேலை செய்வதை” கௌரவக் குறைச்சலாக நினைத்தார்கள் (நெ 3:5; w06 2/1 பக். 10 பாரா 1)
கடவுள் பக்தியுள்ள பெண்கள், உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை மனதார செய்தார்கள் (நெ 3:12; w19.10 பக். 23 பாரா 11)
சபையில் இருக்கிற நிறைய வேலைகள் கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய வேலைகளாக இருக்கலாம் அல்லது சாதாரணமான வேலைகளாக இருக்கலாம். வேறுசில வேலைகள் மற்றவர்களின் கண்களில் படாமல் இருக்கலாம்.—w04 8/1 பக். 18 பாரா 16.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நல்ல செய்திக்காக இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால் அதை நான் எப்படிப் பார்க்கிறேன்?’—1கொ 9:23.