Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆகஸ்ட் 26–செப்டம்பர் 1

சங்கீதம் 78

ஆகஸ்ட் 26–செப்டம்பர் 1

பாட்டு 97; ஜெபம் | ஆரம்ப குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. உண்மையில்லாமல் போன இஸ்ரவேலர்கள்—எச்சரிக்கும் உதாரணம்

(10 நிமி.)

யெகோவா செய்த அற்புதமான செயல்களை இஸ்ரவேலர்கள் மறந்துவிட்டார்கள் (சங் 78:11, 42; w96 12/1 பக். 29-30)

யெகோவா கொடுத்த நல்ல விஷயங்களுக்கு இஸ்ரவேலர்கள் நன்றியோடு இருக்கவில்லை (சங் 78:19; w06 7/15 பக். 17 பாரா 16)

செய்த தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை; திரும்பத் திரும்ப யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போனார்கள் (சங் 78:40, 41, 56, 57; w11-E 7/1 பக். 10 பாரா. 3-4)


யோசித்துப் பாருங்கள்: யெகோவாவுக்கு உண்மையாக இருக்க எது நமக்கு உதவி செய்யும்?

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 78:24, 25—மன்னாவை ‘வானத்தின் தானியம்,’ ‘பலசாலிகளின் உணவு’ என்றெல்லாம் பைபிள் ஏன் சொல்கிறது? (w06 7/15 பக். 11 பாரா 4)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 5)

5. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்திப் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 4)

6. பேச ஆரம்பிப்பது

(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். சுருக்கமாகப் பேசச் சொல்லும் ஒருவரிடம் பேசுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)

7. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிளில் இருக்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட உண்மையைப் பற்றிப் பேசாமல் நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை நீங்கள் சந்திக்கும் நபருக்கு இயல்பான விதத்தில் சொல்லுங்கள், பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 96

8. நற்செய்தியாளரான பிலிப்புவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

பைபிளில் நிறைய நல்ல உதாரணங்களும் கெட்ட உதாரணங்களும் இருக்கின்றன. அந்த உதாரணங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள நேரமும் முயற்சியும் தேவை. பைபிள் பதிவுகளை வாசிப்பது மட்டுமல்லாமல், அதிலுள்ள பாடங்களைப் பற்றி நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதன்படி நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யவும் வேண்டும்.

நற்செய்தியாளரான பிலிப்பு, ‘கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்தவராக’ இருந்தார். (அப் 6:3, 5) அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்—நற்செய்தியாளரான பிலிப்பு என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்த விஷயங்களைப் பற்றி என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள்:

  • திடீரென்று சூழ்நிலைகள் மாறியபோது பிலிப்பு நடந்துகொண்ட விதம்.—அப் 8:1, 4, 5

  • தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போக பிலிப்பு தயாராக இருந்ததால் அவருக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள்.—அப் 8:6-8, 26-31, 34-40

  • உபசரிக்கும் குணத்தைக் காட்டியதால் பிலிப்புக்கும் அவருடைய குடும்பத்துக்கும் கிடைத்த பலன்கள்.—அப் 21:8-10

  • பிலிப்புவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வீடியோவில் வந்த குடும்பத்தார் பின்பற்றியதால் கிடைத்த சந்தோஷம்

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 101; ஜெபம்