Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆகஸ்ட் 5-11

சங்கீதம் 70-72

ஆகஸ்ட் 5-11

பாட்டு 59; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. கடவுளுடைய வல்லமையைப் பற்றி ‘அடுத்த தலைமுறைக்குச் சொல்லுங்கள்’

(10 நிமி.)

சிறுவயதில் யெகோவாவின் பாதுகாப்பை தாவீது அனுபவித்தார் (சங் 71:5; w99 9/1 பக். 18 பாரா 17)

வயதான காலத்தில் தாவீதுக்கு யெகோவா ஆதரவாக இருந்தார் (சங் 71:9; g04 11/8 பக். 17 பாரா 3)

தன்னுடைய அனுபவத்தைச் சொல்லி இளம் பிள்ளைகளை தாவீது உற்சாகப்படுத்தினார் (சங் 71:17, 18; w14 1/15 பக். 23 பாரா. 4-5)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய சபையில் ரொம்ப காலமாக யெகோவாவுக்கு சேவை செய்யும் யாரை என்னுடைய குடும்ப வழிபாட்டில் நான் பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 72:8, அடிக்குறிப்பு—ஆதியாகமம் 15:18-ல் யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி சாலொமோன் ராஜாவுடைய ஆட்சியில் எப்படி நிறைவேறியது? (it-1-E பக். 768)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். உங்களோடு வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்கும் ஒருவரிடம் நல்ல முறையில் பேச்சை முடியுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. முன்பு நீங்கள் பேசியபோது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள தயங்கிய உங்கள் சொந்தக்காரரிடம் இப்போது தொடர்ந்து பேசுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 4)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) பேச்சு. ijwfq 49—பொருள்: தங்களுடைய சில நம்பிக்கைகளை யெகோவாவின் சாட்சிகள் ஏன் மாற்றியிருக்கிறார்கள்? (th படிப்பு 17)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 76

7. குடும்ப வழிபாட்டை நடத்த சில ஐடியாக்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

‘யெகோவா சொல்கிற விதத்தில் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியை’ பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க குடும்ப வழிபாடு ஒரு அருமையான நேரம். (எபே 6:4) கற்றுக்கொள்வதற்கு முயற்சி தேவை. அதேசமயம், அதில் சந்தோஷம் கிடைக்கும். அதுவும், பிள்ளைகள் பைபிள் உண்மைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளும்போது கண்டிப்பாக சந்தோஷம் கிடைக்கும். (யோவா 6:27; 1பே 2:2) “ குடும்ப வழிபாட்டுக்கு ஐடியாக்கள்” என்ற பெட்டியில் இருக்கும் குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். குடும்ப வழிபாட்டைப் பிரயோஜனமாகவும் சந்தோஷமாகவும் நடத்த இந்தக் குறிப்புகள் பெற்றோர்களுக்கு உதவி செய்யும். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • இதில் எந்தக் குறிப்பை நீங்கள் பயன்படுத்த ஆசைப்படுகிறீர்கள்?

  • வேறு ஏதாவது ஐடியா உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கிறதா?

உங்கள் குடும்ப வழிபாட்டைத் தொடர்ந்து அழகாக்குங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • பிள்ளைகள் இல்லாத வீட்டில், குடும்ப வழிபாட்டை மனைவி சந்தோஷமாக அனுபவிக்கிற விதத்தில் கணவர் எப்படி நடத்தலாம்?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 123; ஜெபம்