Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 15-21

சங்கீதம் 63-65

ஜூலை 15-21

பாட்டு 108; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “உங்களுடைய மாறாத அன்பு உயிரைவிட மேலானது”

(10 நிமி.)

கடவுளோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்வது நம் உயிரைவிட ரொம்ப மதிப்புள்ளது (சங் 63:3; w01 10/15 பக். 15-16 பாரா. 17-18)

மாறாத அன்பை யெகோவா எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கும்போது அவருக்கு இன்னும் அதிக நன்றியோடு இருப்போம் (சங் 63:6; w19.12 பக். 28 பாரா 4; w15 10/15 பக். 24 பாரா 7)

கடவுளுடைய மாறாத அன்புக்கு நன்றியோடு இருக்கும்போது அவரை சந்தோஷமாகப் புகழ்வோம் (சங் 63:4, 5; w09 7/15 பக். 16 பாரா 6)

குடும்ப வழிபாட்டுக்கு டிப்ஸ்: யெகோவா உங்களுக்கு மாறாத அன்பை எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்று கலந்துபேசுங்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 64:3—பலப்படுத்தும் விதத்தில் பேசுவது முக்கியம் என்று இந்த வசனத்திலிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்? (w07 11/15 பக். 15 பாரா 6)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்காரருக்கு உங்கள் மொழி தெரியாது. (lmd பாடம் 3 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் சாட்சி கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பே உரையாடல் முடிந்துவிடுகிறது. (lmd பாடம் 2 குறிப்பு 4)

6. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். நீங்கள் பேசும் ஒருவருக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள், அவரை மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)

7. நம்பிக்கைகளை விளக்குவது

(4 நிமி.) நடிப்பு. ijwfq 51—பொருள்: “எனக்கு ஆர்வம் இல்லை” என்று முன்பு சொன்ன ஒருவரிடம் யெகோவாவின் சாட்சிகள் ஏன் மறுபடியும் பேசுகிறார்கள்? (lmd பாடம் 4 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 154

8. கடவுள்மேல் நாம் எப்படி அன்பு காட்டலாம்?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவா, “மாறாத அன்பை . . . அளவில்லாமல் காட்டுகிறவர்.” (சங் 86:15) ‘மாறாத அன்பு’ என்பது, கடமையுணர்ச்சி, உத்தம குணம், உண்மைத்தன்மை, பற்று ஆகியவற்றால் தூண்டப்பட்ட அன்பைக் குறிக்கிறது. பொதுவாக எல்லா மனிதர்கள்மேலும் யெகோவா அன்பு காட்டுகிறார். ஆனால், அவரிடம் நெருக்கமான நட்பு வைத்திருக்கிற அவருடைய ஊழியர்களிடம் மட்டும்தான் மாறாத அன்பைக் காட்டுகிறார். (சங் 33:18; 63:3; யோவா 3:16; அப் 14:17) யெகோவா காட்டும் மாறாத அன்புக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? அவர்மேல் அன்பு காட்டுவதன் மூலமாகத்தான்! அப்படியென்றால், அவர்மேல் எப்படி அன்பு காட்டலாம்? ‘சீஷர்களாக்குங்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிற கட்டளைக்கும் மற்ற எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதன் மூலம்!—மத் 28:19; 1யோ 5:3.

ஒழிந்துபோகாத அன்பை ஊழியத்தில் காட்டுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

இந்த மாதிரி சமயங்களிலும் நல்ல செய்தியைச் சொல்ல அன்பு நமக்கு எப்படி உதவும்?

  • களைப்பாக இருக்கும்போது

  • எதிர்ப்பைச் சந்திக்கும்போது

  • அன்றாட வேலைகளைச் செய்யும்போது

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 79; ஜெபம்