இப்படிப் பேசலாம்
குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)
கேள்வி: குடும்பம் எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னுதான் எல்லாருமே ஆசப்படுவோம். இந்த கேள்விய பாருங்க: “குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?” நீங்க என்ன சொல்வீங்க?
வசனம்: லூ 11:28
பிரசுரம்: குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னா கடவுள் சொல்ற ஆலோசனைகள கேட்கிறது ரொம்ப முக்கியம். அத பத்தி இதுல சொல்லியிருக்கு.
குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32 துண்டுப்பிரதியின் பின்பக்கம்)
கேள்வி: குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னுதான் எல்லாரும் ஆசப்படுவோம். சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு எது முக்கியம்? குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரும் அதுக்கு என்ன செய்யணும்? இத பத்தி கடவுள் என்ன சொல்றார்னு உங்களுக்கு காட்ட ஆசப்படுறேன்.
வசனம்: எபே 5:1, 2 அல்லது கொலோ 3:18-21
பிரசுரம்: குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னா கடவுள் சொல்ற ஆலோசனைகள கேட்கிறது ரொம்ப முக்கியம். அத பத்தி இதுல சொல்லியிருக்கு.
கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
கேள்வி: பைபிள்ல சொல்லியிருக்கிறதுதான் இன்னைக்கு அப்படியே நடக்குது. அதத்தான், நியூஸ்பேப்பர்ல படிக்கிறோம்னு நிறைய பேர் சொல்றாங்க. இதுல சொல்லியிருக்கிற எந்த விஷயத்தை நீங்க சமீபத்துல கேட்டிருக்கீங்க இல்லனா பார்த்திருக்கீங்க?
வசனம்: 2தீ 3:1-5
பிரசுரம்: கடவுள் மேல நம்பிக்கை வைக்கிறவங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி இருக்கு. அது என்னனு இந்த புத்தகத்துல சொல்லியிருக்கு. [முதல் பாடத்தின் 2-வது கேள்வியை காட்டி பேசுங்கள்.]
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.