ஜூலை 4-10
சங்கீதம் 60-68
பாட்டு 104; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஜெபத்தை கேட்பவரான யெகோவாவைப் புகழுங்கள்”: (10 நிமி.)
சங் 61:1, 8—யெகோவாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரிடம் ஜெபம் செய்யுங்கள் (w99 9/15 9 ¶1-4)
சங் 62:8—மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டுங்கள், அவர் அதை சரி செய்வார் என்று நம்புங்கள் (w15 4/15 25-26 ¶6-9)
சங் 65:1, 2—நல்ல மனம் உள்ள ஆட்கள் செய்யும் ஜெபத்தை யெகோவா கேட்கிறார் (w15 4/15 22 ¶13-14; w10 4/15 5 ¶10)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 63:3—ஜீவனைப் பார்க்கிலும் யெகோவாவுடைய கிருபை, அதாவது மாறாத அன்பு நல்லது என்று எப்படி சொல்லலாம்? (w06 6/1 11 ¶8)
சங் 68:18 (NW)—“மனித வடிவிலான வரங்கள்” யார்? (w06 6/1 10 ¶5)
60 முதல் 68 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 63:1–64:10
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதிக்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். ஒவ்வொரு வீடியோவையும் பார்த்த பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 81
“எளிமையாக வாழுங்கள், சந்தோஷமாக சேவை செய்யுங்கள்!”: (15 நிமி.) முதலில், கட்டுரையை கலந்து பேசுங்கள். பிறகு, JW பிராட்காஸ்டிங்கில் வந்த ஆடம்பரமான வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம் என்ற வீடியோவை காட்டி சுருக்கமாக கலந்து பேசுங்கள். (tv.pr418.com வெப்சைட்டில் வீடியோக்கள் > குடும்பம் என்ற தலைப்பில் பாருங்கள்.) எளிமையாக வாழ்ந்து யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 3 ¶14-21, பெட்டி பக்கம் 30, ‘சிந்திக்க’ பக்கம் 32
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 94; ஜெபம்