கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நடுநிலைமை ஏன் முக்கியம்? (மீ 4:2)
சமாரியனைப் பற்றிய உவமை இரண்டு விஷயங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. ஒன்று, யெகோவா பாரபட்சம் காட்டாத கடவுள். இரண்டு, நாம் “எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும்” என்று அவர் எதிர்பார்க்கிறார். அதாவது, அந்தஸ்து, இனம், தேசம், மதம் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.—கலா 6:10; அப் 10:34.
நடுநிலைமை ஏன் முக்கியம்? (மீ 4:2) என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
கடவுளுடைய மக்கள் மத்தியில் இன்று நடக்கும் விஷயங்களைத்தான் மீகா 4:2 விவரிக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?
-
நடுநிலைமை என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?
-
நம்முடைய யோசனைகளிலும் செயல்களிலும் ஆதிக்கம் செலுத்த அரசியல் அமைப்புகள் முயற்சி செய்கின்றன என்பதை வெளிப்படுத்துதல் 13:16, 17 எப்படிக் காட்டுகிறது?