நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் டிசம்பர் 2016
இப்படிப் பேசலாம்
T-31 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதற்கு... எதிர்காலத்தில் கிடைக்க போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுவதற்கு... உதவும் சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்”
போர் கருவிகள் எல்லாம் விவசாய கருவிகளாக மாற்றப்படும் என்று ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிட்டார். யெகோவாவின் மக்கள் சமாதானமாக இருக்க வேண்டும் என்று இதிலிருந்து புரிந்துகொள்கிறோம். (ஏசாயா 2:4)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்” புத்தகத்திலிருந்து மனதை தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்
பைபிளில் இருக்கும் நியமங்களை புரிந்துகொள்ளவும் அதை தங்களுடைய வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தவும் “கடவுளது அன்பு” புத்தகம் உதவும்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
மேசியா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்
கலிலேயா மாகாணத்தில் மேசியா ஊழியம் செய்வார் என்று பல வருஷங்களுக்கு முன்பு ஏசாயா சொல்லியிருந்தார். கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியை கலிலேயா முழுவதும் இயேசு சொன்னபோது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்”
விசுவாசத்தைக் காட்டுவதிலும் மனப்பூர்வமாக சேவை செய்வதிலும் நாம் எப்படி ஏசாயாவைப் போல இருக்கலாம்? தேவை அதிகமுள்ள இடத்துக்கு குடிமாறிப் போன குடும்பத்தின் அனுபவத்தில் இருந்து நீங்களும் இதை கற்றுக்கொள்ளுங்கள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்
பூஞ்சோலை பூமியைப் பற்றி ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம் அன்று எப்படி நிறைவேறியது, இன்று எப்படி நிறைவேறி இருக்கிறது, எதிர்காலத்தில் எப்படி நிறைவேறும்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிறவர்கள் பாரபட்சம் காட்டுவதில்லை
முன்பு எதிரிகளாக இருந்தவர்கள் இப்போது சகோதரர்களாக மாறியிருக்கிறார்கள். பைபிள் கல்விதான் சிறந்தது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை இழந்துவிடுவோம்
தனக்கு இருந்த அதிகாரத்தை செப்னா எப்படி பயன்படுத்தியிருக்க வேண்டும்? அவனுக்கு பதிலாக எலியாக்கீமை யெகோவா ஏன் நியமித்தார்?