கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்”
நாம் ஒவ்வொருவரும் ஏசாயா போல கடவுளுக்கு மனப்பூர்வமாக சேவைச் செய்ய வேண்டும். கடவுள்மீது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதனால்தான், கடவுள் சொன்ன வேலையைப் பற்றி எல்லா விவரங்களும் அவருக்கு தெரியாதபோதிலும் உடனே அதைச் செய்வதாக ஒத்துக்கொண்டார். (ஏசா 6:8) ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடங்களுக்கு உங்களால் போக முடியுமா? அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய நீங்கள் தயாரா? (சங் 110:3) அப்படிச் செய்ய நீங்கள் தயாராக இருந்தால் முதலில் “செலவைக் கணக்கிட்டு” பார்க்க வேண்டும். (லூ 14:27, 28) அதேசமயத்தில், ஊழியம் செய்வதற்காகத் தியாகங்கள் செய்ய தயாராக இருங்கள். (மத் 8:20; மாற் 10:28-30) ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடத்துக்கு குடிமாறினோம் என்ற வீடியோவில் பார்த்தபடி, யெகோவாவுடைய சேவையில் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களை ஒப்பிடும்போது நாம் செய்யும் தியாகங்கள் ஒன்றுமே இல்லை.
வீடியோவைப் பார்த்த பிறகு, பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
ஈக்வடார் என்ற நாட்டில் ஊழியம் செய்வதற்கு விலியம்ஸ் குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரும் என்னென்ன தியாகங்களைச் செய்தார்கள்?
-
எங்குபோய் ஊழியம் செய்வது என்று முடிவு செய்வதற்கு முன்பு அவர்கள் எதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்த்தார்கள்?
-
அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தது?
-
எங்கு ஊழியம் செய்ய ஆட்கள் தேவை என்பதைப் பற்றி நீங்கள் எப்படி தெரிந்துகொள்ளலாம்?
குடும்ப வழிபாட்டில் பின்வரும் கேள்விகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்:
-
குடும்பமாக நாம் எப்படி இன்னும் அதிகமாக ஊழியம் செய்யலாம்? (km 8/11 4-6)
-
தேவை அதிகமுள்ள இடங்களுக்கு போக முடியவில்லை என்றால் நம்முடைய சபையில் என்னென்ன விதங்களில் உதவி செய்யலாம்? (w16.03 23-25)