பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்
இந்தத் தீர்க்கதரிசனம் இஸ்ரவேலர்களின் விஷயத்தில் எப்படி நிறைவேறியது?
-
பாபிலோனிலிருந்து விடுதலையாகி தங்களுடைய நாட்டுக்கு திரும்பி வந்த வழியிலும் சரி, சொந்த நாட்டில் மீண்டும் குடியேறிய பிறகும் சரி கொடிய மிருகங்களுக்கோ கொடூரமான மனிதர்களுக்கோ பயப்படவேண்டிய நிலைமை அவர்களுக்கு வரவில்லை.—எஸ்றா 8:21, 22.
இந்தத் தீர்க்கதரிசனம் நம் நாளில் எப்படி நிறைவேறி வருகிறது?
-
யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்ட பிறகு நிறைய பேர் அவர்களுடைய கெட்ட குணங்களை மாற்றியிருக்கிறார்கள். மூர்க்கத்தனமாக இருந்தவர்கள் சாந்தமானவர்களாக மாறியிருக்கிறார்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டவர்கள் எல்லாரும் ஆன்மீக பூஞ்சோலையில் இன்று வாழ்கிறார்கள்.
இந்தத் தீர்க்கதரிசனம் எதிர்காலத்தில் எப்படி நிறைவேறும்?
-
யெகோவாவுடைய விருப்பத்தின்படி, இந்த முழு பூமியும் ஏதேன் தோட்டத்தைப் போல் மாறிவிடும். எல்லாரும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள். மனிதர்களாலோ மிருகங்களாலோ நமக்கு எந்த ஆபத்தும் வராது.
கடவுளைப் பற்றி கற்றுக்கொண்டதால் பவுல் அடியோடு மாறிவிட்டார்
-
ஒரு பரிசேயனாக இருந்தபோது அவர் கொடூரமாக நடந்துகொண்டார்.—1தீ 1:13.
-
கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு கிடைத்ததால் அவர் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார்.—கொலோ 3:8-10.