கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிறவர்கள் பாரபட்சம் காட்டுவதில்லை
யெகோவா பாரபட்சமாக நடந்துகொள்வது கிடையாது. (அப் 10:34, 35) “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த” மக்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். (வெளி 7:9) அதனால், கிறிஸ்தவ சபையில் இருக்கிறவர்களும் பாரபட்சமாக நடப்பது கிடையாது. (யாக் 2:1-4) யெகோவா சொல்லிக்கொடுக்கும் விஷயங்களுக்காக நாம் நன்றியோடு இருக்கலாம். ஏனென்றால், நிறைய பேர் தங்களுடைய கெட்ட குணங்களை விட்டுவிட அது உதவியிருக்கிறது. அவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! (ஏசா 11:6-9) பாரபட்சமாக நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த முயற்சியைச் செய்யும்போது நாம் யெகோவாவைப் போல் இருக்க முயற்சி செய்கிறோம்.—எபே 5:1, 2.
ஜானியும் கிதியோனும்: முன்பு எதிரிகள், இப்போது சகோதரர்கள் என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
-
பிரிவினையையும் பாகுபாட்டையும் ஒழிப்பதற்கு மனிதர்கள் எடுக்கும் முயற்சியைவிட யெகோவா சொல்லி கொடுக்கும் விஷயங்கள் சிறந்தது என்று எப்படி சொல்லலாம்?
-
உலகம் முழுவதும் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை பார்க்கும்போது எது உங்கள் மனதைக் கவருகிறது?
-
நாம் ஒற்றுமையாக இருப்பது யெகோவாவுக்கு எப்படி புகழ் சேர்க்கும்?