கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்” புத்தகத்திலிருந்து மனதை தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்
ஏன் முக்கியம்? ஒருவருடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர் முதலில் யெகோவா கொடுத்திருக்கும் சட்டதிட்டங்களைக் கற்றுக்கொண்டு அதன்படி வாழ வேண்டும். (ஏசா 2:3, 4) பைபிளில் இருக்கும் நியமங்களைப் புரிந்துகொள்ளவும் அதை தங்களுடைய வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தவும் “கடவுளது அன்பு” புத்தகம் உதவும். (எபி 5:14) அவர்கள் மனப்பூர்வமாக தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் நாம் சொல்லித்தர வேண்டும்.—ரோ 6:17.
எப்படி செய்வது?
-
பைபிள் படிப்பவர்களை மனதில் வைத்து நன்றாக தயாரியுங்கள். படிக்கும் விஷயத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள கேள்விகளை முன்கூட்டியே தயாரியுங்கள்.—நீதி 20:5; be 259
-
பைபிள் நியமங்களை தங்கள் வாழ்க்கையில் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரியவைப்பதற்கு இந்தப் புத்தகத்திலுள்ள எல்லா பெட்டிகளையும் பயன்படுத்துங்கள்
-
பைபிள் படிப்பு படிப்பவர்களுக்காக நீங்கள் தீர்மானம் எடுக்காமல் அவர்களாகவே யோசித்து தீர்மானம் எடுக்க உதவி செய்யுங்கள்.—கலா 6:5
-
ஒருசில பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க அவர்களுக்கு உதவி தேவையா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பின்பு, யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ்வதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.—நீதி 27:11; யோவா 14:31