“நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்”
“கடைசிநாட்களில்” |
|
“கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்” |
மற்ற எல்லா மதங்களைவிட யெகோவாவின் உண்மை வணக்கம் உயர்ந்திருப்பதைக் குறிக்கிறது |
“எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்” |
உண்மை வணக்கத்தை ஆதரிப்பவர்கள் ஒன்றாக கூடிவருவதைக் குறிக்கிறது |
“நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்” |
உண்மை கடவுளை வணங்குகிறவர்கள் தங்களோடு சேர்ந்துகொள்ளும்படி மற்றவர்களையும் அழைப்பதைக் குறிக்கிறது |
“அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்” |
யெகோவா அவருடைய வார்த்தையைப் பயன்படுத்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறார். அவருக்கு பிடித்தமாதிரி வாழ நமக்கு உதவி செய்கிறார் |
“இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” |
போர் கருவிகள் எல்லாம் விவசாய கருவிகளாக மாற்றப்படும் என்று ஏசாயா குறிப்பிட்டார். யெகோவாவின் மக்கள் சமாதானமாக இருக்க வேண்டும் என்று இதிலிருந்து புரிந்துகொள்கிறோம். ஏசாயாவின் நாட்களில், இந்தக் கருவிகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? |
“பட்டயங்களை மண்வெட்டிகளாகவும்” |
இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் மண்வெட்டி என்பது நிலத்தை உழுவதற்கு கலப்பையின் முனையில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கருவி. சில மண்வெட்டிகள் உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது.—1சா 13:20 |
“ஈட்டிகளை அரிவாள்களாகவும்” |
திராட்சைப் பழங்களை அறுப்பதற்கு அரிவாள் பயன்படுத்தப்பட்டது. இது உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஒரு கைப்பிடியும் இருந்தது.—ஏசா 18:5 |