டிசம்பர் 31, 2018-ஜனவரி 6, 2019
அப்போஸ்தலர் 19-20
பாட்டு 123; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள்”: (10 நிமி.)
அப் 20:28—சபையை மூப்பர்கள் மேய்க்கிறார்கள் (w11 6/15 பக். 20-21 பாரா 5)
அப் 20:31—தேவைக்குத் தகுந்த மாதிரி, மூப்பர்கள் “ராத்திரி பகலாக” உதவுகிறார்கள் (w13 1/15 பக். 31 பாரா 15)
அப் 20:35—மற்றவர்களுக்காகத் தியாகங்கள் செய்யத் தயாராயிருக்கிற மனப்பான்மையை மூப்பர்கள் காட்ட வேண்டும் (bt பக். 172 பாரா 20)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
அப் 19:9—சுறுசுறுப்பாக இருக்கிற விஷயத்திலும், சூழ்நிலைக்குத் தகுந்ததுபோல் சாட்சி கொடுக்கிற விஷயத்திலும் அப்போஸ்தலன் பவுல் எப்படி முன்மாதிரி வைத்தார்? (bt பக். 161 பாரா 11)
அப் 19:19—நாம் பார்த்துப் பின்பற்றுவதற்கு எபேசு கிறிஸ்தவர்கள் எப்படி முன்மாதிரியாக இருந்தார்கள்? (bt பக். 162-163 பாரா 15)
அப்போஸ்தலர் 19, 20 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 19:1-20
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். JW.ORG கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள்.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) வசனத்தையும் மறுசந்திப்புக்கான கேள்வியையும் நீங்களே தேர்ந்தெடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 15
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 122
தகுதிபெற விரும்பும் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுங்கள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்: மூப்பர்களுக்கு சபையில் இருக்கும் முக்கியமான பொறுப்பு என்ன? (அப் 20:28) மூப்பர்கள் ஏன் தொடர்ந்து மற்றவர்க ளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்? அப்போஸ்தலர்களுக்கு பயிற்சி கொடுத்த இயேசுவுடைய முன்மாதிரியை மூப்பர்கள் எப்படிப் பின்பற்றலாம்? பயிற்சியை ஏற்றுக்கொள்கிறவர்க ளுக்கு என்ன மனப்பான்மை இருக்க வேண்டும்? (அப் 20:35; 1தீ 3:1) என்ன நடைமுறையான பயிற்சியை மூப்பர்கள் தரலாம்? யாருக்குப் பயிற்சி கொடுக்கிறார்களோ, அவர்களைப் பற்றிய என்ன சமநிலையான எண்ணம் மூப்பர்களுக்கு இருக்க வேண்டும்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 13 பாரா. 1-10, பகுதி 4
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 17; ஜெபம்