Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—ஆட்களுக்கு ஏற்றபடி பேசுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—ஆட்களுக்கு ஏற்றபடி பேசுங்கள்

ஏன் முக்கியம்: பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் வேறே ஆடுகளும், “வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாக” பெற்றுக்கொள்ள எல்லா விதமான மக்களையும் அழைக்கிறார்கள். (வெளி 22:17) அடையாள அர்த்தமுள்ள இந்தத் தண்ணீர், மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் குறிக்கிறது. வித்தியாசமான பழக்கவழக்கங்களும், மத நம்பிக்கைகளும் உள்ளவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? “நித்திய நல்ல செய்தியை” ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி, அவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் சொல்வதன் மூலம்தான்.​—வெளி 14:6.

எப்படிச் செய்வது:

  • உங்கள் ஊழியப் பகுதியிலுள்ள மக்களின் மனதைத் தொடும் தலைப்பையும் வசனத்தையும் தேர்ந்தெடுங்கள். அதற்கு, “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் விஷயங்களையோ உங்களுக்குப் பலன் தந்திருக்கும் தலைப்புகளையோ பயன்படுத்தலாம். எந்தத் தலைப்பும் வசனமும் மக்களின் மனதை ஈர்த்திருக்கிறது? சமீபத்தில் வந்த எந்தச் செய்தியைப் பற்றி அவர்கள் யோசிக்கிறார்கள், பேசுகிறார்கள்? ஓர் ஆணிடம் அல்லது பெண்ணிடம், எதைப் பற்றிப் பேசினால் ஆர்வமாகக் கேட்பார்கள்?

  • உங்கள் பகுதியில் பொதுவாக எப்படி வாழ்த்து சொல்வார்களோ அப்படிச் சொல்லுங்கள்; அவர்களுடைய பழக்கவழக்கங்களை மதியுங்கள்.​—2கொ 6:3, 4

  • ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் வெளியீடுகளையும் வீடியோக்களையும் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால்தான், ஆர்வமாகக் கேட்பவரிடம் அவற்றைப் பயன்படுத்த முடியும்

  • வேறு மொழி பேசும் மக்கள் உங்கள் ஊழியப் பகுதியில் இருந்தால் அந்த மொழிகளில் வெளியீடுகளையும் வீடியோக்களையும் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்

  • நீங்கள் பேசும் விஷயத்தை ஊழியத்தில் சந்திக்கும் நபருக்கு ஏற்ற விதத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். (1கொ 9:19-23) உதாரணத்துக்கு, நீங்கள் சந்திக்கும் நபருக்கு நெருக்கமான ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டதாக உங்களுக்குத் தெரியவந்தால் அவரிடம் எப்படிப் பேசுவீர்கள்?

வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சகோதரர் எந்த விஷயத்தைப் பற்றி வீட்டுக்காரரிடம் பேசத் தொடங்கினார்?

  • வீட்டுக்காரருடைய வாழ்க்கையில் என்ன நடந்திருந்தது?

  • இந்தச் சந்தர்ப்பத்திற்கு எந்த வசனம் பொருத்தமாக இருந்தது, ஏன்?

  • நீங்கள் பேசும் விஷயங்களை, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களின் மனதைத் தொடும் விதத்தில் எப்படி மாற்றியமைக்கிறீர்கள்?