கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பூமி தன் வாயைத் திறந்து “ஆறுபோல் . . . பாய்ந்துவந்த வெள்ளத்தைக் குடித்தது”
கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் அரசாங்க அதிகாரிகள் யெகோவாவின் மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். (எஸ்றா 6:1-12; எஸ்தர் 8:10-13) இன்றும்கூட, ‘ராட்சதப் பாம்பாகிய’ சாத்தானுடைய தூண்டுதலால் “ஆறுபோல்” பாய்ந்துவரும் எதிர்ப்புகளை, “பூமி” (அதாவது, நியாயமாக நடந்துகொள்ளும் சில அதிகாரிகள் அல்லது அமைப்புகள்) தன் வாயைத் திறந்து குடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். (வெளி 12:15, 16) ‘மீட்பு தரும் கடவுளாகிய’ யெகோவா, சில சமயங்களில் இதுபோன்ற மனித ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி தன்னுடைய மக்களுக்கு உதவி செய்யலாம்.—சங் 68:20; நீதி 21:1.
ஒருவேளை நீங்கள் விசுவாசத்தின் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதில் உறுதியாக இருங்கள். (ஆதி 39:21-23; சங் 105:17-20) உங்களுடைய விசுவாசத்துக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்; உங்களுடைய உத்தமத்தை பார்த்து உலகம் முழுவதுமுள்ள சகோதர சகோதரிகள் பலப்படுகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.—பிலி 1:12-14; வெளி 2:10.
கொரியாவிலுள்ள சகோதரர்கள் சிறையிலிருந்து விடுதலை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
தென் கொரியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் ஏன் பல வருஷங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார்கள்?
-
சில சகோதரர்கள் சீக்கிரமாக விடுதலையாவதற்கு உதவி செய்த நீதிமன்ற தீர்ப்புகள் எவை?
-
உலகம் முழுவதும் விசுவாசத்தின் காரணமாகச் சிறையில் இருக்கும் நம்முடைய சகோதரர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
-
இப்போது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
-
வழக்குகளில் நமக்குக் கிடைக்கும் வெற்றிகளுக்கு உண்மையில் யார் காரணம்?