தூய வணக்கத்துக்கு சுத்தமாக இருப்பது முக்கியம்
கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் நாம் சுத்தமாக இருப்பது முக்கியம். அப்படியென்றால், உடல், ஒழுக்கம், வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உலக மக்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, நாம் யெகோவா கொடுத்திருக்கிற நெறிமுறைகளை உண்மையோடு கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய பரலோகத் தகப்பன் அசுத்தமானதாக நினைக்கிற எதையும் நாம் செய்வதில்லை.
இந்த உலகத்தின் நெறிமுறைகளை ஒதுக்கித்தள்ளுவதால் நாம் எப்படிப் பயனடைகிறோம்?