Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பத்திரிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்

பத்திரிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்

2018-லிருந்து வெளிவருகிற நம்முடைய பொது இதழ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தின் அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகள் எல்லாமே ‘கற்பிப்பதற்கான கருவிகளின்’ பாகமானவைதான். அதனால், அவற்றை நாம் ஊழியத்தில் பயன்படுத்தலாம். பயணம் செய்யும்போதோ கடைக்குப் போகும்போதோ சில பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு போகலாம். பைபிள் படிப்பு எடுப்பதற்காக இந்தப் பத்திரிகைகளை நாம் பயன்படுத்துவதில்லை என்றாலும், ஒருவர் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தை வளர்க்க இவை உதவும்.

ஒருவரிடம் பேச ஆரம்பித்த பிறகு, ஒரு வசனத்தைக் காட்டி, அந்த நபருக்கு ஏற்ற விஷயத்தை விளக்கும் ஒரு பத்திரிகையைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். உதாரணத்துக்கு, அவர் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால் அல்லது வேதனையிலோ மன அழுத்தத்திலோ அவதிப்பட்டுக்கொண்டிருந்தால் அவரிடம் இப்படிச் சொல்லலாம்: “சமீபத்துல, இந்த விஷயத்த பத்துன ஒரு நல்ல கட்டுரைய படிச்சேன். அத உங்களுக்கு காட்டட்டுமா?” அவருக்கு ஆர்வம் இருப்பது தெரிய வந்தால், அப்போதே அந்தப் பத்திரிகையை அவருக்குக் கொடுக்கலாம், அல்லது அதன் எலக்ட்ரானிக் பிரதியை அவருக்கு அனுப்பலாம். பத்திரிகைகளைக் கொடுப்பது மட்டுமே நம்முடைய நோக்கம் கிடையாது. இருந்தாலும், இந்தப் பத்திரிகைகளைக் கொடுக்கும்போது, கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடக்க விரும்புகிறவர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.—அப் 13:48.

2018

2019

2020

 

நீங்கள் ஊழியம் செய்கிற பகுதியில் இருக்கிற மக்கள் எந்தெந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்?