Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 16-17

பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

16:12-15

பாவப் பரிகார நாளில் தூபப்பொருள் எரிக்கப்பட்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் செய்கிற அர்த்தமுள்ள ஜெபங்கள் அவருக்கு முன் செலுத்தப்படுகிற தூபம்போல் இருக்கிறது. (சங் 141:2) தலைமைக் குரு யெகோவாவுக்கு முன் ஆழ்ந்த பயபக்தியோடு தூபத்தை எடுத்துக்கொண்டு போனதுபோல, நாமும் ஆழ்ந்த பயபக்தியோடும் மரியாதையோடும் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறோம்.

  • தலைமைக் குரு, பலிகளைச் செலுத்துவதற்கு முன் தூபப்பொருளை எரிக்க வேண்டியிருந்தது. அதேபோல், இயேசுவும் தன் உயிரைப் பலியாகக் கொடுப்பதற்குமுன் யெகோவா அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர் உத்தமமாகவும் உண்மையாகவும் வாழ வேண்டியிருந்தது.

என்னுடைய பலிகள் யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கின்றனவா என்பதை நான் எப்படி உறுதி செய்துகொள்ளலாம்?