கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவா கொடுக்கும் கண்டிப்புக்கு ஆதரவு தருவதன் மூலம் அன்பு காட்டுங்கள்
சபைநீக்கம் செய்வது சபையைப் பாதுகாக்கிறது; தவறு செய்தவரைக் கண்டித்துத் திருத்துகிறது. (1கொ 5:6, 11) யெகோவா கொடுக்கிற கண்டிப்புக்கு ஆதரவு தருவதன் மூலம் நாம் அன்பு காட்டுகிறோம். ஒருவரை சபைநீக்கம் செய்யும்போது அவருடைய நெருங்கிய உறவினர்கள், நீதிவிசாரணைக் குழுவிலுள்ள சகோதரர்கள் உட்பட, சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே அது வேதனையாகத்தான் இருக்கும். ஆனாலும் நாம் அன்பு காட்டுகிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?
எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் பெயரையும் அவருடைய பரிசுத்தமான நெறிமுறைகளையும் நாம் நேசிக்கிறோம். (1பே 1:14-16) அதோடு, சபைநீக்கம் செய்யப்பட்ட நபரையும் நாம் நேசிக்கிறோம். கடுமையான கண்டிப்பு வேதனையாக இருந்தாலும், “அது பிற்பாடு சமாதான பலனைத் தரும், அதாவது நீதியான வாழ்வைத் தரும்.” (எபி 12:5, 6, 11) சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரோடு அல்லது தொடர்பறுத்துக்கொண்ட ஒருவரோடு நாம் சகவாசம் வைத்துக்கொண்டால், அவருக்கு யெகோவா கொடுத்த கண்டிப்பை நாம் மதிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும். யெகோவா தன்னுடைய மக்களை ‘சரியான அளவுக்குத்தான்’ கண்டித்துத் திருத்துகிறார் என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (எரே 30:11) அந்த நபர் ஒருநாள், இரக்கமுள்ள நம் தகப்பனிடம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். அதுவரை, யெகோவா கொடுத்த கண்டிப்புக்கு நாம் ஆதரவு கொடுக்கலாம். அதோடு, யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்யலாம்.—ஏசா 1:16-18; 55:7.
முழு இதயத்தோடு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
ஒரு பிள்ளை யெகோவாவை விட்டுப்போகும்போது பெற்றோர்கள் எப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்கிறார்கள்?
-
யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு சபையார் எப்படி ஆதரவு கொடுக்கலாம்?
-
குடும்பத்தாரைவிட யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் ரொம்ப முக்கியம் என்பதை என்ன பைபிள் உதாரணம் காட்டுகிறது?
-
குடும்பத்தாரைவிட யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் முக்கியம் என்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்?