Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் அன்புக்கு நன்றி

உங்கள் அன்புக்கு நன்றி

தெசலோனிக்கேயா சபையிலிருந்தவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்கள். இருந்தாலும், ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினார்கள். (2தெ 1:3, 4) அவர்களைப் போலவே இன்றைக்கு இருக்கிற யெகோவாவின் மக்களும் உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்கள்மேல் அன்பு காட்டுகிறார்கள். நீங்கள் கொடுக்கிற நன்கொடைகள், கஷ்டத்தில் இருக்கிற உங்கள் சகோதரர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கின்றன. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில், தொடர் கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழே இருக்கிற “உங்கள் நன்கொடைகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன” என்ற பகுதியைப் பாருங்கள். நீங்கள் காட்டுகிற அன்புக்கும் தாராள குணத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!

உங்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

• நம்முடைய நன்கொடைகள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?

• சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வதற்கு எது சிறந்த வழி?—jw.org வெப்சைட்டில் இருக்கிற “மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.