பைபிளில் இருக்கும் புதையல்கள்
தேசத்தைப் பிரித்த விதத்தில் யெகோவாவின் ஞானம் பளிச்சிடுகிறது
ஒவ்வொரு கோத்திரத்துக்கும் தோராயமாக எங்கே நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிற வேலையை குலுக்கல் முறையில் யெகோவா வழிநடத்தினார் (யோசு 18:10; it-1-E பக். 359 பாரா 1)
மரணப்படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். (யோசு 19:1; it-1-E பக். 1200 பாரா 1)
ஒவ்வொரு கோத்திரத்தின் பகுதி எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிற பொறுப்பை மக்களிடமே யெகோவா விட்டுவிட்டார் (யோசு 19:9; it-1-E பக். 359 பாரா 2)
கோத்திரங்களுக்குள் சண்டையோ போட்டி பொறாமையோ வராதபடி நிலம் பிரிக்கப்பட்டது. இதிலிருந்து, புதிய உலகத்திலும் யெகோவா எல்லாவற்றையும் ஒழுங்காகவும் சீராகவும் செய்வார் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைக்கிறது, இல்லையா?