கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நம் கடின உழைப்பை யெகோவா மறப்பதில்லை
கடின முயற்சி எடுத்து மற்றவர்களுக்காக நாம் ஏதாவது செய்யும்போது அதை அவர்கள் பெரிதாக நினைக்காமல் இருக்கலாம். சீக்கிரத்தில் அதை மறந்துகூட போகலாம். ஆனால் யெகோவா அப்படிச் செய்வாரா? நிச்சயம் செய்ய மாட்டார். அவருக்குச் சேவை செய்வதற்காக முழு மனதோடு நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் மறக்கவே மாட்டார். உடல்நிலை சரியில்லாததால் முன்புபோல் நம்மால் நிறைய செய்ய முடியவில்லை என்றாலும் அவர் நம்மைக் கைவிடவே மாட்டார்.—எபி 6:10.
யெகோவா மறக்கவே மாட்டார் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
யெகோவாவின் சேவையில் சகோதரர் ஹிப்ஷ்மேன் எப்படியெல்லாம் கடினமாக உழைத்திருக்கிறார்?
-
சகோதரர் ஹிப்ஷ்மேன் தன் மனைவியை இழந்தார், வயதானதால் தளர்ந்தும்போனார். ஆனாலும், அவரை மறக்கவில்லை என்பதை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார்?
-
முழுநேர சேவையைப் பொறுத்ததில் சகோதரர் ஹிப்ஷ்மேன் ஒரு செல்வந்தராக வாழ்ந்திருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?—நீதி 10:22, அடிக்குறிப்பு