Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“ஆகாபின் வம்சமே அடியோடு அழிந்துபோகும்”​—2ரா 9:8

“ஆகாபின் வம்சமே அடியோடு அழிந்துபோகும்”​—2ரா 9:8

யூதா ராஜ்யம்

யோசபாத் ராஜாவாக இருக்கிறார்

சுமார் 911 கி.மு.: யோராம் (யோசபாத்தின் மகன்; ஆகாப் மற்றும் யேசபேலின் மகளான அத்தாலியாளின் கணவன்) யூதாவின் ஒரே ராஜாவாகிறார்

சுமார் 906 கி.மு.: அகசியா (ஆகாப் மற்றும் யேசபேலின் பேரன்) ராஜாவாகிறார்

சுமார் 905 கி.மு.: அத்தாலியாள், ராஜ வம்சத்தின் எல்லா வாரிசுகளையும் கொன்றுபோட்டு ஆட்சியைப் பிடிக்கிறாள். அவளுடைய பேரனான யோவாசை மட்டும் தலைமைக் குருவான யோய்தா காப்பாற்றி ஒளித்து வைக்கிறார்.​—2ரா 11:​1-3

சுமார் 898 கி.மு.: யோவாஸ் ராஜாவாகிறார். அத்தாலியாள் ராணியை தலைமைக் குரு யோய்தா கொன்றுபோடுகிறார்.​—2ரா 11:​4-​16

இஸ்ரவேல் ராஜ்யம்

சுமார் 920 கி.மு.: அகசியா (ஆகாப் மற்றும் யேசபேலின் மகன்) ராஜாவாகிறார்

சுமார் 917 கி.மு.: யோராம் (ஆகாப் மற்றும் யேசபேலின் மகன்) ராஜாவாகிறார்

சுமார் 905 கி.மு.: யெகூ, இஸ்ரவேலின் ராஜாவான யோராமையும் அவருடைய சகோதரர்களையும், யோராமின் அம்மாவையும் (யேசபேலையும்), யூதாவின் ராஜாவான அகசியாவையும் அவருடைய சகோதரர்களையும் கொன்றுபோடுகிறார் ​—2ரா 9:​14–10:17

சுமார் 904 கி.மு.: யெகூ, ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறார்