கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்”
தாராள குணம் மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்று இயேசு சொன்னார். (லூ 6:38) கொடுப்பதை நீங்கள் பழக்கமாக்கிக்கொண்டால், உங்களைப் பார்த்து சகோதர சகோதரிகள்கூட தாராள குணத்தையும் அன்பையும் காட்டுவார்கள்.
சந்தோஷமாகக் கொடுப்பது நம் வணக்கத்தின் ஒரு பாகம். கஷ்டப்படுகிற சகோதர சகோதரிகளுக்குத் தாராளமாக உதவி செய்பவர்களை யெகோவா கவனிக்கிறார். அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.—நீதி 19:17.
கொடுக்கிற பழக்கம் உங்களுக்கு இருப்பதற்காக நன்றியோடு இருக்கிறோம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய உங்களுடைய நன்கொடைகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?
-
கொஞ்சமோ அதிகமோ, கொடுப்பதை நாம் ஏன் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்?—“மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது” என்ற கட்டுரையை jw.org-ல் பாருங்கள்.