Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 16-22

சங்கீதம் 119:57-120

டிசம்பர் 16-22

பாட்டு 129; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. கஷ்டங்களைச் சகிப்பது எப்படி?

(10 நிமி.)

கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதையும் ஆழமாகப் படிப்பதையும் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் (சங் 119:61; w06 6/15 பக். 20 பாரா 2; w00 12/1 பக். 14 பாரா 3)

கஷ்டங்கள் உங்கள் குணங்களை அழகாக்க அனுமதியுங்கள் (சங் 119:71; w06 9/1 பக். 14 பாரா 4)

ஆறுதலுக்காக யெகோவாவை நம்பியிருங்கள் (சங் 119:76; w17.07 பக். 13 பாரா. 3, 5)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கஷ்டங்களைச் சகித்திருக்க என்னென்ன வழிகளில் யெகோவா எனக்கு உதவி செய்திருக்கிறார்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 119:96—இந்த வசனத்தின் அர்த்தம் என்னவாக இருக்கலாம்? (w06 9/1 பக். 14 பாரா 5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நம் வெப்சைட்டைக் காட்டுங்கள், பிறகு jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. அடுத்த வார பொதுப் பேச்சுக்கு அந்த நபரை அழையுங்கள். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவைப் பயன்படுத்துங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwbq 157—பொருள்: இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (lmd பாடம் 3 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 128

7. சகித்திருக்க யெகோவா உதவுவார்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

சகித்திருப்பது என்றால் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் விட்டுக்கொடுக்காமல், தாக்குப்பிடித்து நிற்பதைக் குறிக்கிறது. நிலை தடுமாறாமல் இருப்பதையும், கஷ்டங்களைப் பற்றிய சரியான மனப்பான்மையோடு இருப்பதையும், ‘எல்லாம் ஒருநாள் சரியாகும்’ என்ற நம்பிக்கையோடு இருப்பதையும்கூட குறிக்கிறது. நமக்கு சகிப்புத்தன்மை இருந்தால் பிரச்சினைகள் வரும்போது கிறிஸ்தவ ஓட்டத்தில் நம் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவோ ‘பின்வாங்கவோ’ மாட்டோம். (எபி 10:36-39) சகித்திருக்க யெகோவா நமக்கு உதவுவார்; அதைச் செய்ய அவர் ஆர்வமாக இருக்கிறார்.—எபி 13:6.

சகித்திருக்க யெகோவா எப்படி உதவுகிறார் என்பதை ஒவ்வொரு வசனத்துக்குப் பக்கத்திலும் எழுதுங்கள்.

கஷ்டங்களைச் சகித்திருப்பவர்களுக்காக உருக்கமாக ஜெபம் செய்யுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • கஷ்டங்களைச் சகித்திருப்பவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள jw.org எப்படி உதவுகிறது?

  • சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்ய, பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்கலாம்? அது ஏன் நல்லது?

  • சகித்திருக்க சகோதர சகோதரிகளுக்கு உதவும்படி ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?

  • மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது, கஷ்டங்களை சகித்திருக்க நமக்கு எப்படி உதவும்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 19 பாரா. 14-20, பக். 152-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 32; ஜெபம்