Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 18-24

சங்கீதம் 107-108

நவம்பர் 18-24

பாட்டு 7; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்”

(10 நிமி.)

பாபிலோனிலிருந்து இஸ்ரவேலர்களை விடுதலை செய்ததுபோல், சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அவனுடைய உலகத்திலிருந்தும் பொய்யான போதனைகளிலிருந்தும் யெகோவா நம்மை விடுதலை செய்திருக்கிறார் (சங் 107:1, 2; கொலோ 1:13, 14)

நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருந்தால், சபையில் அவரைப் புகழ்வோம் (சங் 107:31, 32; w07 4/15 பக். 20 பாரா 2)

யெகோவா நமக்கு அன்பாக செய்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கும்போது, நம் மனதில் நன்றி பொங்கும் (சங் 107:43; w15 1/15 பக். 9 பாரா 4)

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 108:9—“நான் பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்” என்று மோவாபைப் பற்றி யெகோவா ஏன் சொன்னார்? (it-2-E பக். 420 பாரா 4)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 1 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்லுங்கள். பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டை கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) ijwyp 90—பொருள்: நெகடிவ் எண்ணங்களை விரட்ட... (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 46

7. யெகோவாவுக்கு நன்றி சொல்ல பாடல்கள் பாடுகிறோம்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

செங்கடல். எகிப்தியர்களுடைய பயங்கரமான ராணுவம் இஸ்ரவேலர்களைத் துரத்துகிறது. யெகோவா அவர்களை அற்புதமாக காப்பாற்றுகிறார். அந்த மக்களின் நெஞ்செல்லாம் நன்றி வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அதன் பின்பு என்ன செய்தார்கள்? அந்த நன்றியை உற்சாகம் பொங்க பாட்டாகப் பாடினார்கள். (யாத் 15:1-19) அந்தச் சமயத்தில், ஆண்கள் முதலில் பாட ஆரம்பித்தார்கள். (யாத் 15:21) கடவுளைப் புகழ்வதற்கு, இயேசுவும் ஆரம்பக்கால கிறிஸ்தவர்களும்கூட பாடல்கள் பாடினார்கள். (மத் 26:30; கொலோ 3:16) நாமும், சபையில்... மாநாடுகளில்... பாடல்கள் பாடி கடவுளைப் புகழ்கிறோம், அவருக்கு நன்றி சொல்கிறோம். உதாரணத்துக்கு, இப்போது நாம் பாடிய “யெகோவாவே, நன்றி!” என்ற பாடலை, 1966 முதல் நம்முடைய கூட்டங்களில் பாடி வருகிறோம்.

சில கலாச்சாரங்களில், நாலு பேர் முன்பு பாடுவதற்கு ஆண்கள் கூச்சப்படுகிறார்கள். இன்னும் சிலர், ‘என் குரலைக் கேட்டால் எல்லாரும் ஓடி விடுவார்கள்’ என்று சொல்லி பாடத் தயங்குகிறார்கள். அப்படி நாம் யோசிப்பது சரியாக இருக்குமா? இருக்காது. ஏனென்றால், பாட்டு பாடுவது நம் வணக்கத்தின் ஒரு பாகம். எவ்வளவோ முயற்சி எடுத்து நம் அமைப்பு பாடல்களைத் தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் பாடுவதற்குப் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்: எல்லாரோடும் சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும். அப்படிச் செய்யும்போது யெகோவாமேல் நமக்கிருக்கும் அன்பையும் நன்றியையும் காட்ட முடியும்.

நம் சரித்திரம் சொல்லித்தரும் பாடம்—இசை எனும் பரிசு, பகுதி 2 என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • 1944-ல் என்ன முக்கியமான சம்பவம் நடந்தது?

  • ராஜ்ய பாடல்களை நேசிப்பதை சைபீரியாவில் இருக்கும் நம் சகோதரர்கள் எப்படிக் காட்டினார்கள்?

  • யெகோவாவின் சாட்சிகள் பாடல்கள் பாடுவதற்கு ஏன் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 73; ஜெபம்