Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 25–டிசம்பர் 1

சங்கீதம் 109-112

நவம்பர் 25–டிசம்பர் 1

பாட்டு 14; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. நம் ராஜா இயேசுவுக்கு ஆதரவு கொடுங்கள்

(10 நிமி.)

பரலோகத்துக்குத் திரும்பிப் போன பிறகு, இயேசு யெகோவாவுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார் (சங் 110:1; w06 9/1 பக். 13 பாரா 6)

1914-லிருந்து இயேசு தன்னுடைய எதிரிகள் நடுவே ஆட்சி செய்ய ஆரம்பித்தார் (சங் 110:2; w00 4/1 பக். 18 பாரா 3)

நம்மால் முடிந்ததை மனப்பூர்வமாக செய்யும்போது இயேசுவின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியும் (சங் 110:3; be பக். 76 பாரா 2)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக நான் என்ன குறிக்கோள்களை வைக்கலாம்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 110:4—இந்த வசனத்தில் இருக்கும் ஒப்பந்தத்தை விளக்குங்கள். (it-1-E பக். 524 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். துண்டுப்பிரதியைக் கொடுத்து பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)

5. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq 23—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை? (lmd பாடம் 4 குறிப்பு 4)

6. சீஷர்களை உருவாக்குவது

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 72

7. கடவுளுடைய அரசாங்கத்தை நாம் எப்படி ஆதரிக்கலாம்?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

வானத்தையும் பூமியையும் ஆளுகிறவர் யெகோவாதான் என்பதற்கு கடவுளுடைய அரசாங்கம் இன்று ஒரு அத்தாட்சியாக இருக்கிறது. (தானி 2:44, 45) இந்த அரசாங்கத்தை ஆதரிக்க நம்மால் முடிந்ததை எல்லாம் செய்ய வேண்டும். அப்போது, யெகோவாவுடைய ஆட்சிதான் சிறந்தது என்று நாம் நம்புவதைக் காட்ட முடியும்.

‘சமாதானத்தின் அதிபதிக்கு’ எப்போதும் ஆதரவு காட்டுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

  • கடவுளுடைய அரசாங்கத்துக்கு நாம் எப்படி ஆதரவு கொடுக்கலாம்?

கடவுளுடைய அரசாங்கத்துக்கு நம் ஆதரவைக் காட்டுவதற்கு உதவும் இந்த குறிப்புகள் ஒவ்வொன்றுக்குப் பக்கத்திலும் பொருத்தமான வசனத்தை எழுதுங்கள்.

  • நம் வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கம்தான் முக்கியம் என்பதைக் காட்டுவது.

  • கடவுளுடைய அரசாங்கத்தின் ஒழுக்கநெறிகள்படி வாழ்வது.

  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ஆர்வத்துடிப்புடன் மற்றவர்களுக்குச் சொல்வது.

  • மனித அரசாங்கத்தை மதிப்பது; கடவுளுடைய சட்டமா மனிதர்களுடைய சட்டமா என்று வரும்போது, கடவுளுடைய சட்டத்துக்கு மட்டுமே கீழ்ப்படிவது.

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 75; ஜெபம்