Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 4-10

சங்கீதம் 105

நவம்பர் 4-10

பாட்டு 3; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘அவர் தன் ஒப்பந்தத்தை என்றென்றும் நினைத்துப் பார்க்கிறார்’

(10 நிமி.)

ஆபிரகாமுக்கு யெகோவா ஒரு வாக்குக் கொடுத்தார்; அதே வாக்குறுதியை ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுத்தார் (ஆதி 15:18; 26:3; 28:13; சங் 105:8-11)

அந்த வாக்குறுதி நிறைவேற வாய்ப்பு இல்லாததுபோல் தோன்றியிருக்கலாம் (சங் 105:12, 13; w23.04 பக். 28 பாரா. 11-12)

ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தை யெகோவா மறக்கவே இல்லை (சங் 105:42-44; it-2-E பக். 1201 பாரா 2)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கொடுத்த வாக்கை யெகோவா காப்பாற்றுவார் என்பதைத் தெரிந்துகொண்டது எனக்கு எப்படி உதவும்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 105:17-19—நல்ல நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள ‘யெகோவாவுடைய வார்த்தை’ யோசேப்புக்கு எப்படி உதவியது? (w86-E 11/1 பக். 19 பாரா 15)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் சந்திக்கும் நபர் பிஸியாக இருக்கிறார். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்கும் நபரிடம் மரியாதையான விதத்தில் பேசி, உரையாடலை நிறுத்திவிடுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 5)

6. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. போன தடவை அந்த நபர் ஆர்வம் காட்டிய தலைப்பில் ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

7. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. அந்த நபருக்கு JW லைப்ரரியைப் பற்றி சொல்லிவிட்டு அதை டவுன்லோட் செய்ய உதவுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 84

8. அன்பைக் காட்ட ஒரு வழி

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவா நியமித்த ராஜாவான இயேசு கிறிஸ்துவுக்கு நம்முடைய அன்பைக் காட்ட ஒரு வழி என்ன தெரியுமா? நம்முடைய நேரம், சக்தி, பொருள் வசதியை எல்லாம் கடவுளுடைய அரசாங்க வேலைக்காகப் பயன்படுத்துவதுதான். இப்படி நாம் அன்பைக் காட்டும்போது, அது நம் சகோதர சகோதரிகளுக்குப் பிரயோஜனமாக இருக்கும். அதோடு, யெகோவாவிடமும் நாம் நெருக்கமாவோம். (யோவா 14:23) jw.org வெப்சைட்டில் “உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வருகின்றன. உலகம் முழுவதும் இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு நம் நன்கொடைகள் எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைகள் காட்டுகின்றன.

உங்கள் நன்கொடைகள் செய்யும் வேலை என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • மத சுதந்திரத்துக்காகப் பயன்படுத்தப்படும் நன்கொடைகள் சகோதர சகோதரிகளுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?

  • நன்கொடைகளை ‘சமநிலையாக’ பயன்படுத்துவது ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு எப்படி உதவியிருக்கிறது?—2கொ 8:14

  • பைபிள் மொழிபெயர்ப்பு வேலைக்கு நன்கொடைகளைப் பயன்படுத்துவதால் என்ன பலன்கள் கிடைத்திருக்கிறது?

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 97; ஜெபம்