Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை நாம் எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்?

பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை நாம் எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்?

பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருக்கும் அதே விஷயங்கள்தான் பைபிள் சொல்லித் தருகிறது* புத்தகத்திலும் இருக்கிறது. பைபிள் படிப்பு நடத்துவதற்கு நாம் பயன்படுத்தும் இந்த இரண்டு புத்தகங்களில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் ஒன்றுதான். அது சொல்லப்பட்டிருக்கும் வரிசையும் ஒன்றுதான். இருந்தாலும், பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளும் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களும் ரொம்பவே எளிமையாக இருக்கிறது. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை புரிந்துகொள்ள கஷ்டப்படுகிறவர்களுக்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. பிற்சேர்க்கைக்கு பதிலாக பின்குறிப்பு என்ற பகுதி இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. பாடத்தில் இருக்கும் சில வார்த்தைகளுக்கு சுருக்கமான விளக்கங்கள் இதில் இருக்கிறது. ஆரம்ப கேள்விகளும் பைபிள் கற்பிப்பவை என்ற பெட்டியும் இதில் இல்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு அதிகாரத்திலும் விளக்கப்பட்ட பைபிள் உண்மைகளின் முக்கியக் குறிப்புகள் அந்த அதிகாரத்தின் முடிவில் இருக்கும். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை போலவே பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தையும் எல்லா மாதங்களிலும் கொடுக்கலாம். அது அந்த மாதம் அளிக்கவேண்டிய புத்தகமாக இல்லாவிட்டாலும் அதை கொடுக்கலாம். பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை நாம் எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்?

முக்கியக் குறிப்புகள்: பொதுவாக பைபிள் படிப்பு நடத்தும்போது முதலில் பாராவை வாசித்து, பின்பு கேள்வியை கேட்கிறோம். இப்படி படிப்பது நிறைய பேருக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்திருக்கிறது. ஆனால், ஓரளவுக்கு மட்டும் தமிழ் தெரிந்த அல்லது அதை வாசிக்க கஷ்டப்படுகிற நபர்களுக்கு பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை பயன்படுத்தலாம். படிப்பை நடத்துவதற்கு முக்கியக் குறிப்புகள் என்ற பகுதியை பயன்படுத்தலாம். அந்த அதிகாரத்தில் இருக்கும் விஷயங்களை அவர்களாகவே படிக்கும்படி உற்சாகப்படுத்தலாம். ஒவ்வொரு முறை படிப்பு நடத்தும்போதும் ஒரு பைபிள் உண்மையை சொல்லிக்கொடுக்கலாம். அதற்கு சுமார் 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். முக்கியக் குறிப்புகள் பகுதியில், அந்த அதிகாரத்தில் இருக்கும் விஷயங்கள் சுருக்கமாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனால், படிப்பு நடத்துபவர் நன்றாக தயாரிக்க வேண்டும். முக்கியமாக, பைபிள் படிப்பு படிக்கும் நபரை மனதில் வைத்து தயாரிக்க வேண்டும். ஒருவேளை பாராவை வாசித்து கேள்வி கேட்கும் முறையில் படிப்பை நடத்தினால், முக்கியக் குறிப்புகள் என்ற பகுதியை மறுபார்வை செய்ய பயன்படுத்தலாம்.

பின்குறிப்பு: இந்த பகுதியில் விளக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அந்தந்த அதிகாரத்தின் வரிசைப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தில் இருந்து படிப்பு நடத்தும்போது, பின்குறிப்பில் இருக்கும் தகவல்களை படிப்பு நடத்துபவர் சேர்த்துக்கொள்ளலாம்.