Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிரசங்கி 7–12

“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”

“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”

இளம் வயதிலேயே மகத்தான ‘சிருஷ்டிகரை நினைக்க’ உங்கள் திறமைகளை பயன்படுத்தி அவருக்கு சேவை செய்யுங்கள்

12:1, 13

  • நிறைய இளைஞர்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால் கஷ்டமான நியமிப்புகளைக்கூட அவர்களால் செய்ய முடிகிறது

  • வயதாகி அதிகம் செய்ய முடியாமல் போவதற்கு முன், இளைஞர்கள் தங்களுடைய சக்தியையும் நேரத்தையும் கடவுளுடைய சேவையில் பயன்படுத்த வேண்டும்

வயதான காலத்தில் வரும் சவால்களை பற்றி சாலொமோன் ராஜா கவிதை நடையில் சொல்கிறார்

12:2-7

  • வசனம் 3, NW: ‘ஜன்னல் வழியாகப் பார்க்கிற பெண்களுக்கு எல்லாமே இருட்டாகத் தெரியும்’

    கண் பார்வை மங்கிவிடுவதை குறிக்கிறது

  • வசனம் 4, NW: ‘பாடல் சத்தமெல்லாம் அடங்கிவிடும்’

    காது சரியாக கேட்காமல் போவதை குறிக்கிறது

  • வசனம் 5, NW: ‘பசியைத் தூண்டுகிற பழத்தைச் சாப்பிட்டால்கூட பசியெடுக்காது’

    சாப்பிட தோன்றாததை குறிக்கிறது