நவம்பர் 28 —டிசம்பர் 4
உன்னதப்பாட்டு 1-8
பாட்டு 106; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்”: (10 நிமி.)
[உன்னதப்பாட்டு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை காட்டுங்கள்.]
உன் 2:7; 3:5—தான் காதலித்த நபருக்காக காத்திருக்க வேண்டும் என்று சூலேமியப் பெண் உறுதியாக இருந்தாள் (w15 1/15 31 ¶11-13)
உன் 4:12; 8:8-10—அவள் காத்திருந்த சமயத்தில், உண்மையாகவும் ஒழுக்கமாகவும் இருந்தாள் (w15 1/15 32 ¶14-16)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
உன் 2:1—எந்தக் குணங்கள் சூலேமியப் பெண்ணின் அழகுக்கு அழகு சேர்த்தன? (w15 1/15 31 ¶13)
உன் 8:6—உண்மையான அன்பை ஏன் “கடும் ஜூவாலை” [அதாவது, “‘யா’வின் ஜூவாலை,” NW] என்று சொல்கிறோம்? (w15 1/15 29 ¶3; w06 11/15 20 ¶7)
உன்னதப்பாட்டு 1 முதல் 8 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) உன் 2:1-17
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) fg—பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை பயன்படுத்தி சிற்றேட்டை கொடுங்கள். (குறிப்பு: நடிப்பின்போது வீடியோவை காட்டாதீர்கள்.)
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) fg—அந்த நபரை கூட்டத்துக்கு அழையுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 30-31 ¶8-9
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 115
“இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—டேட்டிங் செய்ய நான் தயாரா?”: (9 நிமி.) “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—டேட்டிங் செய்ய நான் தயாரா?” என்ற கட்டுரையிலிருந்து பேச்சு கொடுங்கள். (jw.org வெப்சைட்டில், பைபிள் போதனைகள் > டீனேஜர்களுக்கு என்ற தலைப்பில் பாருங்கள்.)
இது காதலா, மோகமா? (6 நிமி.) முதலில், வீடியோவை காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். (வீடியோக்கள்> நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி.14 ¶1-13
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 21; ஜெபம்