Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 1-3

“உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”

“உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”

1:20; 2:1, 2

  • ‘ஏழு நட்சத்திரங்கள்’: முக்கியமாக, பரலோக நம்பிக்கையுள்ள மூப்பர்களைக் குறிக்கின்றன; மற்ற எல்லா மூப்பர்களையும்கூடக் குறிக்கின்றன

  • “[இயேசுவின்] வலது கையில்”: அந்த நட்சத்திரங்கள் இயேசுவுடைய முழு கட்டுப்பாட்டின் கீழும் அதிகாரத்தின் கீழும் வழிநடத்துதலின் கீழும் இருக்கின்றன. மூப்பர் குழுவிலுள்ள ஒருவரைத் திருத்த வேண்டியிருந்தால், சரியான நேரத்திலும் விதத்திலும் அது செய்யப்படும்படி இயேசு பார்த்துக்கொள்வார்.

  • ‘ஏழு தங்கக் குத்துவிளக்குகள்’: கிறிஸ்தவ சபைகளைக் குறிக்கின்றன. வழிபாட்டுக் கூடாரத்திலிருந்த குத்துவிளக்கு ஒளியைப் பிரகாசித்தது போல, கிறிஸ்தவ சபைகள் ஆன்மீக ஒளியைப் பிரகாசிக்கின்றன. (மத் 5:14) இயேசு அந்தக் குத்துவிளக்குகளின் ‘நடுவில் நடப்பதாக’ சொல்லப்படுவது, எல்லா சபைகளுடைய வேலைகளையும் அவர் கண்காணிப்பதைக் குறிக்கிறது.