நவம்பர் 16-22
லேவியராகமம் 4-5
பாட்டு 150; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுங்கள்”: (10 நிமி.)
லேவி 5:5, 6—தவறு செய்தவர்கள் செம்மறியாட்டுக் குட்டியையோ வெள்ளாட்டையோ குற்ற நிவாரண பலியாகச் செலுத்த வேண்டியிருந்தது (it-2-E பக். 527 பாரா 9)
லேவி 5:7—செம்மறியாட்டுக் குட்டியையோ வெள்ளாட்டையோ கொடுக்க வசதியில்லாதவர்களால், இரண்டு காட்டுப் புறாக்களை அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளை பலியாகக் கொடுக்க முடிந்தது (w09 10/1 பக். 32 பாரா 3)
லேவி 5:11—காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோகூட கொடுக்க வசதியில்லாதவர்களால், ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு நைசான மாவைக் கொடுக்க முடிந்தது (w09 10/1 பக். 32 பாரா 4)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 5:1—இந்த வசனம் கிறிஸ்தவர்களான நமக்கு எப்படிப் பொருந்துகிறது? (w16.02 பக். 29 பாரா 14)
லேவி 5:15, 16—ஒருவர் எப்படி ‘யெகோவாவின் பரிசுத்த காரியங்களுக்கு விரோதமாக . . . தெரியாத்தனமாகப் பாவம் செய்ய’ வாய்ப்பிருக்கிறது? (it-1-E பக். 1130 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 4:27–5:4 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள், ஆனால், ஏசாயா 9:6, 7-ஐப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள், ஆனால், சங்கீதம் 72:16-ஐப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) lvs பக். 209 பாரா. 22-23 (th படிப்பு 19)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
60 வருஷங்களாக ஒன்றாக சேர்ந்து பயனியர் ஊழியம்—யெகோவாவின் உதவியால்தான் இது சாத்தியம்: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: டகாகோ மற்றும் ஹிசாக்கோவுக்கு அவர்களுடைய நியமிப்பில் என்னென்ன விசேஷ வாய்ப்புகளும் சந்தோஷங்களும் கிடைத்தன? சகோதரி டகாகோவுக்கு என்ன உடல்நலப் பிரச்சினை வந்தது, அதைச் சமாளிக்க எது அவருக்கு உதவியது? உண்மையான சந்தோஷமும் திருப்தியும் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தன? நீதிமொழிகள் 25:11; பிரசங்கி 12:1; எபிரெயர் 6:10 ஆகிய வசனங்கள் அவர்களுடைய அனுபவத்தை எப்படிப் படம்பிடித்துக் காட்டுகின்றன?
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்” மற்றும் பெட்டிகள் பக். 5
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 116; ஜெபம்