Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 4-5

உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுங்கள்

உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுங்கள்

5:5-7, 11

இஸ்ரவேலில் இருந்த ஒரு ஏழைக்குக்கூட யெகோவாவோடு சமாதானத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பரம ஏழைகளாலும் கடவுளுக்குப் பிரியமான காணிக்கையைக் கொடுக்க முடிந்தது. அது, அவர்களால் முடிந்த மிகச் சிறந்ததாக இருக்க வேண்டியிருந்தது. மாவைக்கூட காணிக்கையாகக் கொடுக்க முடிந்தது. அது மதிப்புக்குரிய விருந்தாளிகளுக்காகப் பயன்படுத்துகிற ‘நைசான மாவாக’ இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்த்தார். (ஆதி 18:6) இன்றும்கூட சூழ்நிலைகள் காரணமாக அதிகம் கொடுக்க முடியாவிட்டாலும் நாம் கொடுக்கிற மிகச் சிறந்த “புகழ்ச்சி பலியை” யெகோவா ஏற்றுக்கொள்கிறார்.—எபி 13:15.

உடல்நிலை மோசமானதாலோ பலம் இல்லாததாலோ முன்புபோல் எதையும் உங்களால் செய்ய முடியவில்லை என்றால், இந்த விஷயம் உங்களை எப்படி உற்சாகப்படுத்தும்?