Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 2-8

யாத்திராகமம் 39-40

நவம்பர் 2-8
  •  பாட்டு 120; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஆலோசனைகளை மோசே கவனமாகக் கடைப்பிடித்தார்”: (10 நிமி.)

    • யாத் 39:32—வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பது சம்பந்தமாக யெகோவா கொடுத்த ஆலோசனைகளை மோசே கவனமாகக் கடைப்பிடித்தார் (w11 9/15 பக். 27 பாரா 13)

    • யாத் 39:43—வழிபாட்டுக் கூடார வேலைகள் முடிந்த பிறகு, மோசே நேரில் போய் அதைப் பார்வையிட்டார்

    • யாத் 40:1, 2, 16—யெகோவா கொடுத்த வழிமுறைகளின்படி மோசே வழிபாட்டுக் கூடாரத்தை அமைத்தார் (w05 7/15 பக். 27 பாரா 3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 39:34—வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பதற்கான கடல்நாய்த் தோல் இஸ்ரவேலர்களுக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? (it-2-E பக். 884 பாரா 3)

    • யாத் 40:34—சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியது எதற்கு அடையாளமாக இருந்தது? (w15 7/15 பக். 21 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 39:1-21 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள். அரசியலில் அல்லது சமுதாயத்தில் நடக்கிற பிரச்சினைகள் சம்பந்தமாக வீட்டுக்காரர் பேச விரும்பினால், நாம் எப்படி நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கலந்துபேசுங்கள்.

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ஒரு அரசியல் வேட்பாளரைப் பற்றியோ அரசியல் பிரச்சினையைப் பற்றியோ உங்களுடைய தனிப்பட்ட கருத்தை வீட்டுக்காரர் கேட்கும்போது அதற்குப் பதில் சொல்லுங்கள் (th படிப்பு 12)

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w16.04 பக். 29 பாரா. 8-10—பொருள்: நம்முடைய பேச்சிலும் எண்ணத்திலும் நடுநிலையோடு இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 125

  • கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள் (மத் 13:16): (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: புரிந்துகொள்ளும் விதத்தில் கேட்பது ஏன் முக்கியம்? மாற்கு 4:23, 24-ன் அர்த்தம் என்ன? எபிரெயர் 2:1-ஐ எப்படி உதாரணத்தோடு விளக்கலாம்? புரிந்துகொள்ளும் விதத்தில் கேட்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 100, 101

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 141; ஜெபம்